| தாளுறுபண் ணவர்நிறுவுந் தடஞ்சிலம்பு | | சூழ்ந்தவராத் தாம்பு நேரும் | | நீளுறுவெண் கதிர்க்கற்றை நிலாத்தொடுதன் | | மதலையென நிற்ற னேரும். |
(இ - ள்.) ஒன்பான் வகைக் கோள்களிலுற்ற பாம்பு (சங்கினங்கள்) முத்தினங்களைச் சொரிதற் கிடமாகிய அகழியா னுடுக்கப் பெற்று நிறம் பொருந்திய அரதனக் கற்கள் பதித்திருத்தலானொளி பொருந்திய மதிலின்கட் டன்னுடல முரிஞுதலைச் செய்ய ஊர்ந்தேறுகின்ற அழகானது திருப்பாற் கடலின்கண் (சாவா மருந்தினை யெடுக்க) முயற்சி கொண்ட தேவர்கள் நிறுவிய பெருமைபொருந்திய மந்தர மலையைச் சுற்றிய பாம்பாகிய தாம்புக் கயிற்றினை யொக்கும். நீளுதலுற்ற வெள்ளிய கதிர்த் திரட்சியை யுடைய சந்திரன் மதிலிற் பொருந்தல் (கடைதற்கு) நாட்டுந் தறியென்று சொல்லும்படி நிற்றலைக் காட்டும். (வி - ம்.) குரூஉ - நிறம். "குருவும் கெழுவும் நிறனாகும்மே" என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தா னுணர்க. வாள் - ஒளி. "வான் ஒளியாகும்" என்னும் சூத்திரத்தா னுணர்க. கோளுறு விண்ணரவம் - நவக்கிரகங்களிலுற்ற அரவமென்க. தன் என்பது அரவத்தை யென்க. தாள் - முயற்சி. நிறுவும் - நிறுத்தும். அராத்தாம்பு - அராவாகிய கயிறு. மதலை - கடைதற்கு நாட்டுந் தறி. கடல் கடைகின்ற காலத்து நிலவு தறியாயினமையை "தம்ப மாமதி யெனவரும்" பாரதச் செய்யுளா னறிக. (64) | வெளிவிரவு வளிதன்பால் விரவநெடும் | | புவிவிரவு விரிநீர் தன்னை | | ஒளிவிரவி நின்றதுபோல் விரவுசெம்பொன் | | மதிலும்ப ருயர்த்த ஞாயில் | | தெளிவிரவு தழற்கொழுந்து சிவணுமவற் | | றெழுந்தூமத் திரட்சி யென்ன | | வளிவிரவு கொடிதுவன்று மிம்முறையால் | | வாணனகர் மதிலும் போலும். |
(இ - ள்.) ஆகாயத்தின்கட் கலந்த காற்றானது (அக்கினியாகிய) தன்னிடத்துக் கலக்க நீண்ட பூமியோடு கலந்த தண்ணீரை. அவ்வக்கினியானது கலந்து நின்றது போல (ஆகாயத்தோடு கலந்த வாயு மண்டலத்தையும், நீரோடு கூடிய பூமண்டலத்தையும் உயர்வாலும் கீழ்ச் செல்லுதலாலும்) கலந்த செம்பொன் வடிவமாகிய மதிலின்மே லுயரிய வேலைப்பா டமையக் கட்டிய மதிலுறுப்பு ஒளி் கலந்த தெளிதல் கலந்த அக்கினியினுடைய நுனியை யொக்கும். அந்நுனியி லிருந்தும் எழுகின்ற புகைக்கற்றை யென்று சொல்லும் வண்ணம் வாயு மண்டலத்தைக் கலந்த கொடிகள் நெருங்கா நிற்கும். இங்ஙனம் கூறிய முறையால் வாணாசுரனது நகராகிய சோணிதபுரத்தின் மதிலை யொக்கும். (வி - ம்.) வெளி விரவு வளி-அகலிரு விசும்பின் அடங்கிய காற்று. தன்பால் விரவ - (அகலிரு விசும்பி லடங்கிய காற்று தன்னுளடங்கிய) |