பக்கம் எண் :

124தணிகைப் புராணம்

அக்கினி தன்னிற் கலக்க. ஒளி, நெடும்புவி விரவு விரிநீர்தன்னை விரவிநின்றதுபோல் - அவ்வக்கினியானது நீண்ட பூமியைத் தன்னுள் ளடக்கிய விரிந்த நீரைத் தன்னுள்ளடக்கி நின்றது போல என்க. இதனால் ஆகாயத்திற் காற்றும், காற்றுள் நெருப்பும், நெருப்புள் நீரும், நீருட்பூமியும் அடங்கி நிற்கு முறை தெற்றெனப் புலனாம். இவ் வைம்பெரும் பூதங்களி னடுநிற்றலாகிய நெருப்பு, மேலுள்ள இரு பூதங்களினும் கீழுள்ள இரு பூதங்களினும் கலந்து நின்று மிளிர்வதுபோல இம்மதில் பூமியைத் தன்னிடத்துக் கொண்ட அகழி நீரையும், ஆகாயத்தோடு கலந்த வாயு மண்டலத்தையும் அக்கினி பூதம்போலக் கலந்து நின்றமையால் "ஒளிவிரவி நின்றதுபோல் விரவு செம்பொன் மதி" லென்றார். ஞாயில் - ஏப்புழைக்கு நடுவே எய்து மறையும் சூட்டென்பர் நச்சினார்க்கினியர். குருவித்தலை யென்பர் அடியார்க்கு நல்லார். "ஞாயிலுஞ் சிறந்து நாட்கொடி நுடங்கும் வாயில்" என்னும் சிலப்பதிகாரத்து (217. 218) அடி அடைக்கலக் காதையா னுணர்க. இம்முறையால் -
இத்தன்மையால்.

(65)

 குழுமுபொறி மடங்கல்களி றடுபுலிவா
           னரம்பாந்தள் குலாய நீரால்
 எழுவரையிற் குவட்டினங்க ளெனநிரந்த
           ஞாயிலினெந் திரங்கள் சில்ல
 எழுவடிவா ளயிலாழி யெய்கணையின்
           னனவுமிழ விலங்கு நொச்சி
 வழுவில்படைக் குலமனைத்தும் வகுக்குமறு
           முகன்கரத்து வளைய மானும்.

(இ - ள்.) குழுமிய பொறியாகிய சிங்கமும், யானையும், கொல்லும் புலியும், குரங்கும், பாம்பும் இவைகள் விளங்கிய தன்மையால் உயர்ந்த மலையின்கண் ணுள்ள சிக்ரக் கூட்டங்கள் என்று சொல்லும் படி பொருந்திய மதிலுறுப்பின்க ணுள்ள பொறிகள் சில, இருப்புலக்கையும், வடித்த வாளும். கூர்மையான சக்கரமும், எய்யத்தக்க அம்பும் ஆகிய இவைபோல்வன பிறவற்றை உமிழாநிற்க, விளங்குகின்ற மதில் குற்றமில்லாத படைக் கூட்டங்க ளனைத்தும் உண்டாக்கின அறுமுகக்கடவுள் திருக் கரத்தின்கணுள்ள சக்கரத்தை யொக்கும்.

(வி - ம்.) மதிலை மலையாகவும். மதிலுறுப்பினைச் சிகரமாகவும் பொறியாகிய மடங்கல் முதலியவற்றை அம் மலையின்கண் வதியும் உயிர்த் தொகையாகவும் கொள்க. மதிலுறுப்பின்கண் ணுள்ளது இயந்திர மென்க. சில்ல உமிழ எனக் கூட்டுக. வளையம் - சக்கரம். இச்சக்கரம் பெருமான் திருக்கரத்தி னின்றும் போந்து பல ஆயுதங்களையும் ஆக்கினமையின் அறுமுகன் கரத்து வளையமென்றார். இதனைக் கந்தபுராணக் கதையா னறிக. குழுமு பொறி மடங்கல், களிறு, அடுபுலி, வானரம், பாம்பு முதலிய இயந்திரங்களா மென்பதை "கரும்பொனியல் பன்றிகத நாகம்விடு சகடம். குரங்குபொரு தகரினொடு" என வரும் சிந்தாமணி (73) செய்யு ளடியானு மிவைகளி னுரையானு முணர்க. களிறு - பன்றிப் பொறி. "மதிற்றலையி னேறினா ருடலைக் கோட்டாற் கிழிக்கும் பன்றிப் பொறியும்" என்றார். குரங்கு - குரங்கு