போலிருந்து சேர்ந்தாரைக் கடிக்கும் பொறியும். பாம்பு - விடவரவாகச் செய்த பொறி. (66) வேறு | வடாதுசார்க் கயிலைக் குன்றம் வளைத்தபொன் னிஞ்சி மானும் | | கெடாதசீர் மதிற்பா னாட்டுங் கேதனத் திரள்கள் சூழ்ந்து | | விடாதுமே னிவப்ப விண்ணின் வேந்திருக் கின்ற காட்சி | | அடாதசீர் காழி வஞ்ச வடவியி னிருத்தல்காட்டும். |
(இ - ள்.) வடக்கண் பொருந்திய கைலை மலையானது (தணிகைநகரைச்) சுற்றிய அழகிய மதிலையொக்கும். கெடாத சிறப்பினையுடைய மதிற்கட் கட்டிய கொடிக் கூட்டங்கள் சுற்றி யிடைவிடாது மேலே யெழத் தேவருலகத்தி லிந்திர னிருக்கின்ற தோற்றமானது வேறொன்றற்கும் பொருந்தாத சிறப்பினையுடைய காழி மாநகரத்தின் கண்ணுள்ள மூங்கில் வனத்தி லொளித்திருத்தலை யொக்கும். (வி - ம்.) வேந்தன் - இந்திரன். "வேந்தன் மேய தீம்புன லுலகம்" என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தானும் "வேந்தனும் வெந்து கெடும்" என்னும் திருக்குறளானு முணர்க. வஞ்சம் - மூங்கில், இதனை "வம்சம்" என்பதன் திரிபென்பர். வஞ்ச அடவியினிருந்த கதை சீகாழிப் புராணத்தா னறிக. (67) | வில்லுமிழ் மணிப்பொற் கோடும் வெண்சுதை யெயிலும் பூப்பப் | | புல்லிய வகழித் தெண்ணீர் புடைவளை பரிவே டக்கும் | | எல்லுமிழ் மதிக்கு நாப்ப ணிலங்குவான் கரையின் பாங்கர் | | ஒல்லும்வார் சோலை மற்றை யுடுக்குல நிரந்த வானம். |
(இ - ள்.) ஒளியைக் கக்குகின்ற மணிக ளொதுங்கிக் கிடக்கும் கரையும் வெள்ளிய சுண்ணச் சாந்து தீற்றிய மதிலும் பொலிய அவற்றைத் தழுவிய அகழியின் கண்ணுள்ள நீரானது (மதியின்) பக்கத்தே சுற்றிய ஊர்கோளுக்கும் ஒளியை விடுகின்ற மதியினுக்கும் நடுவே விளங்குகின்ற ஆகாயமாகும். பெரிய அக்கரையின் பக்கத்தே பொருந்தும் பல மலர்களையுடைய சோலையானது அதனின் வேறாகிய தாரகைக் கூட்டங்கள் பொருந்திய ஆகாயமாகும். (வி - ம்.) கோடு - கரை. வெண்சுதை - சுண்ணச் சாந்து. பூப்ப - பொலிய. "பொருளற்றார் பூப்பர்" என்னும் பொய்யாமொழியும் இப்பொருட்டாதலை யறிக. தெண்ணீர் எழுவாய். பரிவேடம் - சந்திரனைச் சுற்றியிருக்கும் ஊர்கோள். நாப்பண் - நடுவிடம். சந்திரனுக்கும் ஊர்கோளுக்கும் நடுவிடமாகிய வானம் நீங்கிய ஏனைய வானிடம் கரையின் பக்கத்திலுள்ள சோலையாகு மென்பார், "மற்றை யுடுக்குலம் நிறைந்த வானம்" என்றார். தெண்ணீரானது வானாகு மெனவும் சோலை உடுக்குலம் நிரந்த வானாகு மெனவும் முடிவு கொள்க. (68) | இடர்தபு மதினாற் பாலு மெழுந்தகோ புரங்கண் மேருத் | | தடவரை நான்கு மெல்லை தணந்துகந் திருந்த வாங்குக் |
|