ஆடவர்கள் கொடுத்து மகிழ்ச்சியுடன் ஏவற்றொழில் செய்யப் பொருந்திய பரத்தையர்களின் கண்டார் வியக்கத் தக்க சேரியின் வளங்களை விரித்துச் சொல்வாம். (வி - ம்.) பாயின - விரவிய. பந்தொடு பாவை தூங்கும் வாயில் - பகைவரைக் கொணர்ந்து பெண் கோலஞ் செய்து அவர்கள் கையிற் பந்தும் பாவையும் கொடுத்துச் சிற்றிலிழைத்து விளையாடச் செய்வதற்குப் பந்தும் பாவையும் தூங்கும் வாயிலென்க. இதனைச் "செருப்புகன்றெடுத்த சேணுயர் நெடுங்கொடி வரிப்புனை பந்தொடு பாவை தூங்க" என்னும் திருமுருகாற்றுப் படையடி நச்சினார்க்கினியா ருரையான் நன்கு உணர்க. (74) பரத்தையர் தெரு வேறு | | | இங்கணல னெய்துநர்க ளெவ்வுலகின் மாட்டும் | | பொங்குகலை யிற்றணிவு பூண்டுவெரி நீயார் | | தங்கிவைகள் போலெனவொர் சான்றுதெரிப் பார்போல் | | அங்கணவிர் சித்திரம ளப்பிலபொ றித்தார். |
(இ - ள்.) இத் தணிகையின்கண் ணுள்ள பரத்தையர் சேரிக்கண் (அப் பரத்தையரோடு முயக்குற்று இன்பத்தினை யடைந்தவர்கள் உத்தர குருவாகிய) போக பூமி முதலிய எவ்விடங்களிலும் இன்ப மிகுதற் கேதுவாகிய காம நூலாராய்ச்சியின் றாழ்வை மேற்கொண்டு புறங்கொடார் இச் சேரிக்கண் ணுள்ள மாட வரிசையிற் றங்கிய சித்திரங்களைப் போலவென்று சான்று காட்டுவார் போல அச் சேரிக்கண்ணுள்ள சுவர்களில் விளங்குகின்ற ஓவியங்கள் கணக் கில்லனவற்றை வரைந்துள்ளனர். (வி - ம்.) கலை - ஈண்டு மார தந்திரம். எவ்வுலகின் மாட்டும் - உத்தர குருவாகிய போக பூமி முதலிய எவ்விடங்களிலும். உலகு - மாயோன் மேய காடுறை யுலக மென்றாற் போல இடத்தினை யுணர்த்தி நின்றது. வெரிந் + ஈதல் - புறங் கொடுத்தல். சுவரில் வரைந்த ஓவியம் புறங்கொடா திருத்த லியல்பாகலின் "இவைகள் போலென ஒரு சான்று தெரிப்பார்போ" லென்றார். (75) | பற்குறிந கக்குறிகள் பாணிகொடு தட்டல் | | நற்கமிழ்து துய்த்தல்களி நன்றெழ வணைத்தல் | | அற்குகர ணங்களறி யாருமெளி தாகக் | | கற்கும்வகை நின்றனக திர்த்தமணி யோவம். |
(இ - ள்.) ஒளி கதித்தலைச் செய்கின்ற மணிக ளழுத்திய ஓவியங்கள் (கடிதடத்தினும் அதரத்தினும் செய்கின்ற) பற்குறிகளும் (கொங்கையினும் குறியினும் செய்கின்ற) நகக்குறிகளும் (குறியினும், அமிர்தம் நிற்கும் நிலையினும் தட்டுகின்ற) கரதாடனமும், அமிழ்தென இதழ் சுவைத்தலும் களிப்புப் பெரிது மெழா நிற்கத் தழுவுதலுமாகிய |