பக்கம் எண் :

திருநகரப் படலம்129

(காமநூலின் நிலைபெற்ற) கலவிச் செயல்களை (இத்தன்மையன என அறியாத) இளங் காளையரும் எளிதாகக் கற்கும் வண்ணம் நின்றன.

(வி - ம்.) பற்குறி - பல்லாற் செய்யும் குறி; இவை கடிதடத்தினும் இதழினும் செய்யும் அடையாளங்கள்: "பவளவாய் பரவை யல்குல் என்றிவை பருகும் வேலான்" என்னும் சிந்தாமணிச் செய்யுளா னறிக. நகக்குறி - உகிராற் செய்யு மடையாளங்கள்; இவை கொங்கையினும் குறியினும் செய்யப்படுவன வாகும்: "முலைமீது கொழுநன்றன் நகமேவு குறியை" எனவரும் பரணிச் செய்யுளானும், "விற்கலைக்குழ மதிமுழுமதியென விளங்கப், பொற்கலைக் கடிதடங் குறி பொறித்தன போலும்" என வரும் இப்படலம் 23ஆம் செய்யுளானு மறிக. அமிழ்து துய்த்தல் - இதழி னமிர் துண்ணல்; இதனைப் "பாலொடு தேன்கலந்தற்றே பணிமொழி, வாலெயி றூறிய நீர்" என்னும் பொதுமறையா னுணர்க. அணைத்தல் - தழுவுதல். இதனை "மாதர் வலிய அணைத்த சுகம்போல" என வரும் அருணகிரியார் திருவாக்கா னுணர்க. அதற்குக் கரணங்கள் - காம தந்திரத்தில் நிலைபெற்ற கலவிச் செயல்கள். இவை 64 வகைப்படும். இதனை "இன்பக் கலவிக் கரணங்கள் யாவுமிழைத்து" எனவரும் நைடதச் செய்யுளானும் அதனுரையானு முணர்க. மேல்விதந்தோதிய பற்குறி முதலியனவும் 64 உள் அமைந்தனவே யாமென்க. கரணம் - செயல், நல்கமிழ்து - நற்கமிழ்தாயிற் றெனலுமாம்.

(76)

 
 இவர்மனமொ ருக்குமிள மங்கையரில் வைகக்
 கவர்மனம்வி டுத்திளையர் காழிலுயி ரோடும்
 அவிர்பொருள்க வர்ந்துவிடு மாற்றலுடை நல்லார்க்
 கிவர்மனமொ ருக்கலுறி னெங்ஙனுல குய்யும்.

(இ - ள்.) (நாயகர் பரத்தையிற் பிரிந்தமையால் அவர்பால்) விருப்பங்கொண் டெழுகின்ற மனத்தினை யொருக்குதலாற் (கற்பாற்றி யிருக்கும், இளமைப் பருவத்தை யுடைய) அந் நகரத்தின்கண் ணுள்ள இளம் பருவப் பெண்கள் இல்லிடத்தே தங்கும் வண்ணம் (பொருள் கருதிப் பொருளுடையார் பலர் மாட்டுஞ் சேறலான்) பிளவு படுதலாகிய (தங்கள்) மனத்தினைச் செலுத்தி (அந் நகரத்தின்கண் ணுள்ள இளங்காளையரது அறிவாகிய உள்ளீடில்லாத உயிருடனே முன்னையோரா லீட்டப்பட்டு) விளங்குகின்ற பொருளினையும் (இன்பவிலையாக) கவர்ந்து கொண்டு (காலுற்ற சாற்று வேழக் கோதினைப் போலப் பயனின்றென) விடுகின்ற பேராற்றலை யுடைய இன்ப நலம் கனிந்தொழுகு பரத்தையருக்கு (பொருள் கருதிப் பலர் மாட்டும்) செல்லுகின்ற மனத்தினை (ப்பலர் மாட்டும் கவர்படுத்தாது ஒராடவன்பால்) ஒருக்குதலுற்றால் உலகமான தெங்ஙன முய்யும்.

(வி - ம்.) இவர் மனம் - ஆசையோடு கூடிய மனம். இவர் மனத்தை ஒருக்குகின்ற நாயகிக ளென்க. இவர் மன மொருக்கலுறின் - பரத்தையர் விரும்புகின்ற தங்கள் மனத்தைப் பிளவுபடச் செய்யாது ஓராடவன்பா லொருக்கலுறின் என்க. நல்லார்க்கு மனத்தை யொருக்கி ஒரிடத்துச் செலுத்தல் அருமை யென்பது தோன்ற "இவர் மன மொருக்க லுறின்" என்றார். இவர் மனத்தைத் தம் வசப்படுத்தி யொருவர் மாட்டுச் செலுத்துவாராயின் ஆடவர்கள் தங்கள் நாயகிமார்களையறவே மறந்து இவர்கள் மாயவலையிற் சிக்குண்டு இம்மை மறுமைப்