பக்கம் எண் :

130தணிகைப் புராணம்

பயன்களை இழந்து எரிவாய் நிரயத்தைத் தமக்கிடமாகக் கொள்வ ரென்பது தோன்ற "எங்ங னுலகுய்யும்" என்றார். நல்லார்க் குற்றா லெனக் கூட்டுக.

(77)

 அகப்பொருட மக்கருளு வார்க்கஃது நல்கி
 உகப்புறுப ரத்தையர்க ளுண்மையுணர் கல்லார்
 இகப்பறுசு கச்சமரி னெய்த்திறையி றுக்கும்
 புகர்ப்பொருளை யின்பவிலை யென்றுபுகல் கிற்பார்.

(இ - ள்.) (தன்முன்னையோரால் ஈட்டப்பட்டுப் பாதுகாத்து) அகத்தின்கண் வைத்துள்ள பொருளை (உவகையோடு பணிந்து) தங்களுக்குக் கொடுக்கின்ற ஆடவருக்குத் தம்மகப் பொருளாகிய காம இன்பத்தினைக் கொடுத்து உயர்ச்சி பெற்ற பரத்தைமார்கள் (பெண்ணறி வென்பது பெரும் பேதைமைத்தே என்பதனால்) உண்மைத் தன்மையை யறியாராகி (ஒருவருடலி லொருவரொடுங்கி) இருவரென்னும் தோற்றமின்றி மாசுணம் போலப் பின்னி) நீங்குதலற்ற இன்பப் போரின்கண் தோல்வியுற்று (ஆடவர்கள்) இறையாகக் கொடுக்கும் குற்றமுடைய பொருளை இன்ப விலை என்று சொல்வார்கள்.

(வி - ம்.) அகப்பொருள் - தம்மில்லிற் பாதுகாப்பிலுள்ள பொருள். அஃது - தம்முள்ளிற் சேர்த்து வைத்துள்ள காம வின்பப் பொருள். ஆடவர்கள் தம் மகத்திலுள்ள பொருளைக் கொடுத்து இம்மை மறுமைப் பயன்களை யிழத்தல் போலத் தம்மகப் பொருளாகிய காமவின்பத்தைக் கொடுத் தொன்று மிழவாதுயர்ந்து நிற்றலின் "உகப்புறு பரத்தைய" ரென்றார். உகப்பு - உயர்வு. "உகப்பே யுயர்வு" என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தா னுணர்க.

(78)

 இத்தகைய மாதரினி ணங்குசுக வாரி
 தத்தையனை யார்தருத லின்மைதனை நாடி
 மெத்துளம கிழ்ச்சியின்வி டுத்தருள்சி றப்பும்
 ஒத்ததவர் பாலிளைய ருய்த்தநிதி யீட்டம்.

(இ - ள்.) இங்ஙனமாய தகுதியினை யுடைய பரத்தையர் மாட்டுப் பொருந்துகின்ற இன்பப் பெருக்கினைக் கிளிமொழியன்ன மொழியினையுடைய தங்கள் மனைவிமார் தருதலில்லாமையைக் கருதி அப் பரத்தையர் மாட்டுளவாகிய உள்ளத்தின்கண் அதிகரிக்கின்ற மகிழ்வினால் காளைப்பருவத்தை யுடைய ஆடவர் சேர்த்த பொருட் குவியல் (இவ்வாடவர்கள்) கொடுத்தருளிய பரிசினையும் ஒத்தது.

(வி - ம்.) தத்தை யனையார்; ஈண்டு மனைவிமார். மெத்து - அதிகரிக்கின்ற. நிதிக் குவியல் சிறப்பையு மொத்த தென்க. உம்மை யிறந்தது தழீஇயது; இறையிறுத்தலே யன்றிச் சிறப்புமா மென்பதைத் தழுவியது.

(79)

 உடம்புபிணி யாலிறவு ஞற்றறமி கந்து
 மடம்படவு ளம்பொருள்கண் மற்றுமுகு மாற்றால்