| விடம்புரையும்வேசையர்வி ழைச்செனவு ணர்ந்தும் | | உடம்படுவ ரென்னிலவ ருய்க்குநல னெற்றே. |
(இ - ள்.) பரத்தையர் கூட்டமானது, உடலானது பிணியாற் கேடுறலானும் செய்கின்ற அறச் செயல்க ணீங்கி யுள்ளம் அறியாமையின் வயத்ததாதலானும் பொருள்களும் ஏனைய நற்சார்புகளும் கெடுதற்கேதுவாகும் தன்மை யுடைமையாலும் நஞ்சினை யொக்குமென்று (காண்டல் கருதலுரை முதலிய அளவைகளான்) அறிந்து வைத்தும், அக் கூட்டத்தினுக் குடன்படுவாராயின் அப்பரத்தையர் இவர்க்களிக்கும் இன்ப நல மெத்தன்மைத்தோ யாமறிந்திலோம். (வி - ம்.) உஞற்று - செய்கின்ற. உளம் மடம்பட எனவும், விழைச்சு விடம்புரையு மெனவும் மாற்றுக. விழைச்சு - புணர்ச்சி, கூட்டம். உணர்ந்தும்: உம்மை யிழிபு சிறப்பு. எற்றே - எத்தன் மைத்தே ; ஏகாரம் வினா. (80) | நன்பொருளி னுக்கியைய நன்றுவிளை யாடி | | இன்புதவும் வேசையரி றைஞ்சுமடி யாருக் | | கன்பினள வைக்கியைய வாரருள்சு ரக்கும் | | மின்புரைந திச்சடில வித்தகனி கர்த்தார். |
(இ - ள்.) ஆடவர்கள் தமக்கு அளித்த நல்ல பொருளளவுக்கேற்ப (எள்ளினுக் கெண்ணெய் போல வளர்ந்து) நன்றாக விளையாட் டயர்ந்து இன்பினை யுதவும் வரைவிலா மாதர்கள் தன்னை வழிபடு முண்மை யடியார்களுக் கன்பினளவைக் கியைய அருளினைக் கொடுக்கின்ற கங்கா நதியினை யுடைய மின்னலை யொத்த சடையினை யுடைய ஞானமே திருவுருவமான சிவபெருமானை யொத்தனர். (வி - ம்.) பொருளளவினுக் கேற்ப விளையாடுதலாவது - எள்ளினுக் கெண்ணெய் போலப் போகத்தைப் பொருளளவுக் கியைய விளையாடி யளித்தல். (81) | பாடலிசை யாழ்பலப யிற்றுமிசை யோடும் | | ஆடலர வம்புடைய கன்றுபுற னேகும் | | பீடினர்த மக்குமொரு பீழைசெயு மென்றால் | | கூடினவர் முன்புகுழை யாருமுள ரேயோ. |
(இ - ள்.) பாடலினிசையும், பலவகைப்பட யாழைப் பயிற்று மிசையுடனே ஆடுகின்ற ஓசையும் (வீசிதரங்க நியாயத்தால்) வெளியிற் பரவித் தெருவின் கண்ணே செல்லுகின்ற பெருமையினையுடைய பேரறிஞர்களுக்கும் ஒப்பற்ற துன்பத்தினைச் செய்யுமென்றால் அப் பரத்தையர் முன்பு பொருந்தினால் மனங் குழையாதவர்களு முளரோ? (இலர்.) (வி - ம்.) பீழை - துன்பம். அரவம் - ஓசை. புடை அகன்று - வெளியிற் பரவி. புறனேகும் பீடினர் - வீதியிற் செல்லும் பெருமையுடையவர். அவர்முன் "புறனேகும் பீடினர்" எனவே அகத்துட்சென்ற பீடிலார் அவர் என்க. கூடின் என மொழி மாற்றுக. (82) |