பக்கம் எண் :

திருநகரப் படலம்133

செந்நிறத்தோடு கூடிய அணியப்படு பொருள்களாற் றங்களைப் புனைந்தும் ஆண்டுச் செல்வார்கள்.

(வி - ம்.) ஈரிடத்தும் எண்ணும்மைகள் தொக்கன. உத்தலை - உவ்விடம், பரத்தையர் சேரி. இறப்பார் - நடப்பார். ஆக்கம் - செல்வம். உறுவது - சேர்வது, இலக்குமியும் சரசுவதியும் செல்வத்தையும் கல்வியையும் பெற உள்ளிப் பலராகச் சேர்வதை யொப்ப வெள்ளணியும் செவ்வணியு மணிந்து பல மாத ரச்சேரியின்கட் செல்வ ரென்க.

(85)

 சிறப்பினவ கப்பொருள்செ றித்துவிலை யாக்கும்
 மறப்படைக டந்தவிழி மாதரிட னீதால்
 புறப்பொருள்செ றித்துவிலை போக்கியிட ரின்றி
 அறப்புகழ்வி ளைக்குநர்க ளாவணமு ரைப்பாம்.

(இ - ள்.) சிறப்பினை யுடையனவாகிய இன்பப் பொருளைத் (தம்மகத்) தடக்கி விற்றலைச் செய்கின்ற வீரத்தையுடைய வேற் படையினை (வடிவாலும் செயலாலும்) வென்ற கண்களையுடைய பரத்தையர் வதிதரும் இடமிங்ஙனம் கூறியதாகும். இனிப் புறப்பொருள்களை நிறைவித்து விலைப் பொருளுக்கு மாற்றி ஒருவகை இடையூறுமின்றி அறத்தால் வரும் புகழையே விளைவிக்கின்றவர்களாகிய வணிகர்களின் கடைவீதியின் சிறப்பைச் சொல்வாம்.

(வி - ம்.) அகப் பொருள் - அகத்தின்கண் நிகழ்வதாகிய இன்பப்பொருள். செறித்து - அடக்கி. படை - வேற்படை, வாட்படை யெனினுமாம். செறித்து - நிறைவித்து. விலைபோக்கி - விலைப் பொருளுக்கு மாற்றி யென்க. ஏகாரம் விகாரத்தாற் றொக்கது.

(86)

வேறு

 கற்ப கங்களுங் கன்னி வாழையும்
 பொற்ப நட்டெழீஇப் போகு சட்டமேல்
 பற்பன் மாலைகள் பயிற்று மாவணம்
 அற்பு மன்றல்செ யகங்கள் போன்றவே.

(இ - ள்.) கற்பக தருக்களும், இளமைத் தன்மை பொருந்திய வாழை மரங்களும் அழகைச் செய்யும் வண்ணம் நடப்பெற்று எழுந்து உயர்ந்த சட்டங்களின் மேலே பலப்பல மாலைகளைத் தொங்க விடப்பெற்ற கடைவீதியானது அன்பினால் மணவினை செய்கின்ற இல்லங்களை யொத்தன.

(வி - ம்.) கன்னி - இளமை. நட்டு - நடப்பெற்று. போகு - உயர்ந்த. பயிற்றுதல் - ஈண்டு நாலவிடுதல். மன்றல் - மணவினை.

(87)

 மடுக்குங் காலையிற் குறைய வாங்கியும்
 விடுக்குங் காலையின் மிதப்ப நல்கியும்