பக்கம் எண் :

134தணிகைப் புராணம்

 அடுக்குஞ் செல்வம்விண் ணரசு மேசற
 எடுக்கும் பண்பினர் யாரு மென்பவே.

(இ - ள்.) பண்டங்கள் பண்டக சாலையிற் குறைந்த விலைக்குக் கொள்ளுதலைச் செய்தும், பண்டங்களை மாற்றும் காலத்து அதிக விலைக்கு மாற்றியும் அடுக்கப் பெறுகின்ற செல்வம் தங்களை விண்ணுலகினுக் கிறைவனாகிய இந்திரனும் வருந்தும் வண்ணம் எடுத்துச் செல்கின்ற தன்மையை யுடையவர் யாவருமென்று சொல்வார்கள்.

(வி - ம்.) மடுத்தல் - நிறைத்தல். குறைய வாங்கி - குறைந்த விலைக்கு வாங்கி என்க. குறைவு விலை மேனின்றது. மிதப்ப - அதிகமாக "வட்டியின் மிதப்பக் கூறி" என்னுந் திருவிளையாடற் செய்யுளானுணர்க. ஏசற - கவலையடைய. எடுக்கும் - எடுத்துச் செல்கின்ற. என்ப:அசை யெனினுமாம்.

(88)

 கலங்க ளூக்கியுங் கால்க ளூக்கியும்
 அலங்கன் மார்பினா ரமைத்த பல்பொருள்
 விலங்கன் மாடமுன் றனதன் வீழ்நிதி
 இலங்கி யிவ்வுழி யிருந்த தொத்ததே.

(இ - ள்.) மரக்கலன்களைக் (கடலின் வழியாகப் பல தீவுகளினும்) செலுத்தியும், பண்டிகளைத் தரை மார்க்கமாகப் பல தேயங்களினும் செலுத்தியும் சீரகத் தாரையணிந்த மார்பினையுடைய வணிகர்கள் முயற்சியா னீட்டிய பலவகைப் பொருட் குவியல், மலையை யொத்த இல்வரிசைகளின் முன்னர்க் குபேரனால் விரும்பப்படும் சங்கநிதி பதுமநிதி முதலிய நவநிதிகளும் விளங்கி இவ்விடத்து இருந்ததை யொத்தது.

(வி - ம்.) பொருள் மாடங்களின் முன் குவிக்கப்பட்டுள தென்க. பொருள் ஒத்தென முடிவு செய்க. கால் - வண்டி. விலங்கல் - மலை. இலங்கல் -
விளங்கல்.

(89)

 துலாம ணிந்தவர் சூளி கைத்தலைத்
 துலாமி வர்ந்தெழுஞ் சோம திக்கினான்
 நிலாவி ரும்பொரு ணிறைந்த தாமென
 நிலாவு மத்தலை யிவர்ந்து நீங்குமே.

(இ - ள்.) துலாக் கோலினைப் பொருந்தியவராகிய வணிகர் மேன்மாடங்களிடத்துத் துலா விராசி இவர்ந்து செல்லும். வட திசைக் கிறைவனாகிய குபேரன், பொருந்திய பெரிய நிதிகள் நிறைந்துள்ள தென்று கருதி எல்லா வளங்களும் பொருந்திய அம்மாடங்களிற் றங்கி நீங்குவான்.

(வி - ம்.) சோமதிக்கினான் - வடதிசைக் கிறைவனாகிய குபேரன். சோமன் - குபேரன். அவன் திசை வடக்காதலி்ன் "சோம திக்கினான்" எனக் கூறினார். சோம னென்னும் பெயர் சந்திரனுக்கு முளவாகலின் அவனென மயங்காமைப் பொருட்டுக் கூறினா ரெனவுமாம். குபேரன் இவ்வில் வரிசைகளில் நிறைந்துள்ள செல்வப் பெருக்கினைக் கண்டு