பக்கம் எண் :

திருநகரப் படலம்135

விரும்பி இவ் வில்லின்கட் சிறிது தங்கிச் செல்வ னென்க. இவர்தல் - மேனோக்கிச் செல்லல். அத்தலை - அவ்விடம். இவர்ந்து - தங்கி.

(90)

 பொன்னும் வெள்ளியும் பூணு மாடையும்
 மின்னு பன்மணி விராய கோவையும்
 என்ன வேண்டினு மில்லை யென்னுமச்
 சொன்னி கழ்த்திடாச் சோர்வங் குள்ளதே.          

(இ - ள்.) பொற் கட்டிகளும், வெள்ளிகளும், அணிகலன்களும், ஆடைகளும் ஒளிர்கின்ற பல இரத்தினங்களைக் கலவை செய்து கோக்கப்பெற்ற மாலையும் (இவைகளை யன்றி வேறு) எப்பொருளைக் (கோடல் செய்வார்) விரும்பினாலும் (அப் பொருளைத்) தம்பாலில்லை யென்று சொல்லும்படியான அச் சொல்லை (மறந்தும்) சொல்லுதலில்லாத சோரத்தன்மையே அவ்வாவண வீதியின்கண் உள்ளது.

(வி - ம்.) அவ்வாவண வீதியின்கட் கொள்வோர் எப்பொருளைவினாவினும் வினாய பொருளுக்கினப்பொருளையோ அல்லது அப்பொருளையோ உள்ளதெனக் கூறுவார்களேயன்றி இல்லையெனக் கூறார். தம்பாலில்லாத பொருளை இல்லையென்னாது பிறிது பொரு ளுண்டெனக் கூறுதலே ஆண்டுள்ள களவாகும். அமைந்தொருபாற் கோடாத குணமுடையாராதலின் அவர்பாற் பிறர் பொருளைக் கள்ளுதல் செயும் குணம் சிறிது மின்றென்பது போதர "இல்லையென்னு மச்சொன் னிகழ்த்திடாச் சோர்வங்குள்ள தென்றார். சோர்வு - களவு.

(91)

 இலைய வேற்படை யிறைவற் காணிய
 மலையெ லாமடுத் தனைய மாடமுன்
 குலவு பல்பொருட் குப்பை யம்மலை
 நிலவு பல்வரை நிரைக ளொத்தவே.

(இ - ள்.) இலையின் தன்மை யமையப்பெற்ற வேற்படையினையுடைய (தங்கள்) தலைவனாகிய முருகப் பெருமானைக் காணும் பொருட்டு மலைகளெல்லாம் பொருந்தினாலொத்த மாடங்களின் முன்னர் விளங்குகின்ற பல பொருட் குவியல்கள் அம்மலைகளிடத்துப் பொருந்திய பல சிறுமலை வரிசைகளை
யொத்தன.

(வி - ம்.) மலையும், அம் மலையிடத்துப் பொருந்திய அடுக்கலும், இல்லிற்கும் அவ்வில்லின் முன்னர்க் குவித்துள்ள பொருட் குவியலுக்கும் உவமையாம். வரை - ஈண்டுச் சிறுமலை; அஃதாவது அடுக்கலென்க.

(92)

 முன்கு வித்தகண் மூடு முன்புபோய்
 பின்கு வித்தவும் பெயரு மத்தலை
 நன்கு செய்தமுன் னல்வி னைப்பயன்
 தன்கண் வந்துபோந் தனுவொ டொத்ததே.

(இ - ள்.) (ஆவணங்களின் முன்றிலில்) முன்னர்க் குவித்த பொருள் கண்களை மூடு மத்துணைக் காலத்திலே விலைப்பொருளுக்கு