| 13. | தோல் எலும்பும் மாங்கிஷமும் தொல் அன்னத்தால் வளரும் மேல் எலும்பும் சுத்தமென்று வீறாப்பாய் மாண்டேனே. |
| | |
| 14. | போக்கு வரத்தும் பொருள் வரத்தும் காணாமல் வாக்கழிவு சொல்லி மனம்மறுகிக் கெட்டேனே. |
| | |
1. | நெஞ்சொடு புலம்பல் தரவு கொச்சகம் மண்காட்டிப் பொன்காட்டி மாய் இருள் காட்டிச் செங்காட்டில் ஆடுகின்ற தேசிகனைப் போற்றாமல் கண்காட்டும் வேசியர் தம் கண்வலையில் சிக்கிமிக அங்காடி நாய்போல் அலைந்தனையே நெஞ்சமே. |
| | |
| 2. | புட்பாசன அணையில் பொன்பட்டு மெத்தையின் மேல் ஒப்பா அணிந்த பணி யோடாணி நீங்காமல்! இப்பாய்க் கிடத்தி இயமன் உயிர் கொள்ளும் முன்னே முப்பாழைப் போற்ற முயங்கிலையே நெஞ்சமே! |
| | |
| 3. | முப்பாழும் பாழாய் முதற்பாழ் வெறும் பாழாய் அப்பாழுக்கு அப்பால் நின்றாடும் அதைப் போற்றாமல் இப்பாழாம் வாழ்வை நம்பி ஏற்றவர்க்கு ஒன்று ஈயாமல் துப்பாழாய் வந்தவினை சூழ்ந்தனையே நெஞ்சமே! |
| | |
| 4. | அன்னம் பகிர்ந்து இங்கு அலைந்தோர்க்கு உதவிசெயும் சென்மம் எடுத்தும் சிவன் அருளைப் போற்றாமல் பொன்னும் மனையும் எழில் பூவையரும் வாழ்வும் இவை இன்னும் சதமாக எண்ணினையே நெஞ்சமே! |
| | |
| 5. | முன் தொடர்பில் செய்த முறைமையால் வந்த செல்வம் இற்றைநாள் பெற்றோம் என்று எண்ணாது பாழ்மனமே! அற்றவர்க்கும் ஈயாமல் அரன் பூசை ஓராமல் கற்றவர்க்கும் ஈயாமல் கண் மறைந்து விட்டனையே. |
| | |
| 6. | மாணிக்கம் முத்து வயிரப் பணி பூண்டு ஆணிப்பொன் சிங்கா தனத்தில் இருந்தாலும் |