| | காணித் துடலை நமன் கட்டியே கைப்பிடித்தால் காணிப்பொன் கூடவரக் காண்கிலமே நெஞ்சமே! |
| | |
| 7. | கற்கட்டும் மோதிரம் நல்கடுக்கன் அரை ஞாண் பூண்டு திக்கு எட்டும் போற்றத் திசைக்கு ஒருத்தர் ஆனாலும் பற்கிட்ட எமனுயிர் பந்தாடும் வேளையிலே கைச்சட்டம் கூடவரக் காண்கிலமே நெஞ்சமே! |
| | |
| 8. | முன்னம் நீ செய்த தவம் முப்பாலும் சேரும் அன்றிப் பொன்னும் பணிதிகழும் பூவையும் அங்கேவருமோ? தன்னைச் சதமாகச் சற்குருவைப் போற்றாமல் கண்ணற்ற அந்தகன்போல் காட்சியுற்றாய் நெஞ்சமே! |
| | |
| 9. | பை அரவம் பூண்ட பரமர் திருப் பொன்தாளைத் துய்ய மலர் பறித்துத் தொழுது வணங்காமல் கையில் அணிவளையும், காலில் இடும் பாடகமும் மெய் என்று இறுமாந்து விட்டனையே நெஞ்சமே! |
| | |
| 10. | மாதுக்கு ஒரு பாகம் வைத்த அரன் பொன்தாளைப் போதுக்கு ஒரு போதும் போற்றி வருந்தாமல் வாதுக்குத் தேடி இந்த மண்ணில் புதைத்து வைத்தே ஏதுக்குப் போக நீ எண்ணினையே நெஞ்சமே! |
| | |
| 11. | அஞ்சருளைப் போற்றி ஐந்து புலனைத் துறக்க நெஞ்சே உனக்கு நினைவு நான் சொல்லுகிறேன்; வஞ்சகத்தை நீக்கி மறுநினைவு வராமல் செஞ்சரணத் தானைச் சிந்தை செய்வாய் நெஞ்சமே! |
| | |
| 12. | அற்புதமாய் இந்த உடல் ஆவி அடங்கு முன்னே சற்குருவைப் போற்றித் தவம் பெற்று வாழாமல் உற்பத்தி செம்பொன் உடைமை பெருவாழ்வை நம்பிச் சர்ப்பத்தின் வாயில் தவளைபோல் ஆனேனே. |
| | |
| 13. | உற்றார்ஆர்? பெற்றார்ஆர்? உடன்பிறப்புஆர்? பிள்ளைகள்ஆர்? மற்றார் இருந்தால் என்? மாளும்போது உதவுவரோ? |