| | கற்றா இழந்த இளம் கன்றது போலே உருகிச் சிற்றாகிச் சிற்றின்பம் சேர்ந்தனையே நெஞ்சமே! |
| | |
| 14. | வீடிருக்க தாயிருக்க வேண்டும் மனையாள் இருக்க பீடிருக்க ஊன் இருக்கப் பிள்ளைகளும் தாம் இருக்க மாடிருக்கக் கன்றிருக்க வைத்த பொருளிருக்கக் கூடிருக்க நீபோன கோலமென்ன கோலமே? |
| | |
| 15. | சந்தனமும், குங்குமமும், சாந்தும், பரிமளமும் விந்தைகளாகப் பூசிமிகு வேடிக்கை ஒய்யாரக் கந்த மலர் சூடுகின்ற கன்னியரும் தாம் இருக்க எந்தவகை போனாய் என்று எண்ணிலையே நெஞ்சமே! |
| | |
| 16. | காற்றுத் துருத்தி கடியவினைக் குள்ளான ஊற்றைச் சடலத்தை உண்டென்று இறுமாந்து பார்த்திரங்கி அன்னம் பசித்தோருக்கு ஈயாமல் ஆற்று வெள்ளம் போல அளாவினையே நெஞ்சமே! |
| | |
| 17. | நீர்க்குமிழி வாழ்வைநம்பி நிச்சயம் என்றே எண்ணிப் பாக்களவாம் அன்னம் பசித்தோர்க்கு அளியாமல் போர்க்குள் எமதூதன் பிடித்திழுக்கும் அப்போது ஆர்ப்படுவார் என்றே அறிந்திலையே நெஞ்சமே! |
| | |
| 18. | சின்னஞ் சிறுநுதலாள் செய்த பலவினையால் முன் அந்த மார்பின் முளைத்த சிலந்தி விம்மி வன்னம் தளதளப்ப மயங்கி வலைக்குள்ளாகி அன்னம் பகிர்ந்துண்ண அறிந்திலையே நெஞ்சமே. |
| | |
| 19. | ஓட்டைத் துருத்தியை, உடையும் புழுக்கூட்டை ஆட்டும் சிவசித்தர் அருளை மிகப்போற்றியே வீட்டைத் திறந்து வெளியைஒளி யால் அழைத்துக் காட்டும் பொருள் இதென்றுகருதிலையே நெஞ்சமே! |
| | |
| 20. | ஊன்பொதிந்த காயம், உளைந்த புழுக்கூட்டைத் தான் சுமந்த தல்லால்நீ சற்குருவைப் போற்றாமல் கான் பரந்த வெள்ளம் கரைபுரளக் கண்டு ஏகி மீன் பரந்தாற் போலே விசாரமுற்றாய் நெஞ்சமே! |