பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்159


21.உடக்கை ஒருக்கி உயிரை அடைத்துவைத்த
சடக்கைச் சதம் என்று சார்ந்து அங்கு இறுமாந்தை!
உடக்கைத் தகர்த்தே உயிரை எமன் கொள்கையிலே
அடக்கமாய் வைத்த பொருள் அங்குவர மாட்டாதே.
  
22.தித்திக்கும் தேனைத் தெவிட்டாத தெள்ளமுதை,
முத்திக்கு வித்தான முப்பாழைப் போற்றாமல்,
பற்றிப்பிடித்து இயமன் பாசத்தால் கட்டும் வண்ணம்
சுற்றி இருக்கும்வினை சூழ்ந்தனையே நெஞ்சமே!
  
23.அஞ்செழுத்தாய் எட்டெழுத்தாய் ஐம்பத்தோர் அட்சரமாய்ப்
பிஞ்செழுத்தாய் நின்ற பெருமானைப் போற்றாமல்
வஞ்சகமாய் உற்றமுலை மாதர்வலைக் குள்ளாகிப்
பஞ்சரித்துத் தேடிப் பாழுக்கு இறைத்தோமே!
  
24.அக்கறுகு கொன்றைதும்பை அம்புலியும் சூடுகின்ற
சொக்கர் திருத்தாளைத் தொழுது வணங்காமல்
மக்கள் பெண்டிர் சுற்றமுடன் வாழ்வை மிக நம்பி அன்பாய்
எக்காலமும் உண்டென்று எண்ணினையே நெஞ்சமே!
  
25.ஆண்ட குருவின் அருளை மிகப்போற்றி
வேண்டும் கயிலாய வீட்டுவழி பாராமல்
பூண்டகுழல் மாதுநல்லார் பொய்மாய்கைக்கு உள்ளாகித்
தூண்டில் அகப்பட்டுத் துடிகெண்டை ஆனேனே!
  
26.ஏணிப் பழுஆம் இருளை அறுத்தாளமுற்றும்
பேணித் தொழும் கயிலை பேறுபெற மாட்டாமல்
காண அரும் பொருளாய்க் கண்கலக்கப் பட்டடியேன்
ஆணிஅற்ற மாமரம் போல் ஆகினனே நெஞ்சமே!
  
27.கோத்துப் பிரகாசம் கொண்டுருகி அண்டமெல்லாம்
காத்தப் படியே கயிலாயம் சேராமல்
வேற்றுருவப் பட்டடியேன் வெள்ளம்போல் உள்ளுருகி
ஏற்றும் கழுவில் இருந்த பிணம் ஆனேனே!
  
28.நிலைவிட்டு உடலை உயிர் நீங்கி அகலுமுன்னே
சிலைதொட்ட வேடன் எச்சில் தின்றானைச் சேராமல்