இந்தப் பாடலானது பட்டினத்தாரின் உடற்கூற்று வண்ணப் பாடல்களுடன் ஒப்பு நோக்கி ஆராயத்தக்கது. “எரியெனக் கென்னும் புழுவோவெனக் கென்று மிந்த மண்ணுஞ் சரியெனக் கென்னும் பருந்தோ வெனக் கென்னும் தான் புசிக்க நரியெனக்கென்னும் புன்னாயெனக் கென்னும் இந்த நாறுடலைப் பிரியமுடன் வளர்த்தே னிதனாலென்ன பேறெனக்கே” பாம்பாட்டியின், இருவர் மண்சேர்த்திட வொருவர் பண்ண ஈரைந்து மாதமாய் வைத்த சூளை அருமை யாயிருப்பினு மந்தச்சூளை அரைக்காசுக் காகா தென்றாடாய் பாம்பே இந்தப் பாடலும், பரியாசம் போலவே கடித்த பாம்பு பலபேரறியவே மெத்த வீங்கிப் பரியார மொருமாது பார்த்தபோது பையோடே கழன்ற தென்றாடாய் பாம்பே இந்தப் பாடலும் பட்டினத்தாரின் உடற்கூற்றுப் பண்ணப் பாடலுடன் ஒப்பு நோக்கத்தக்கது. ஒருமடமாதும் ஒருவனும் ஆகி இன்பசுகம்தரும் அன்பு பொருந்தி உணர்வுகலங்கி ஒழுகியவிந்து ஊறுசுரோணிதம் மீது கலந்து பனியில் ஓர் பாதி சிறுதுளிமாது பண்டியில் வந்து என்ற பாடல் பாம்பாட்டிச் சித்தரின் மேற்கண்ட பாடலுடன் ஒத்துப் போவதை ஒருங்கு காணலாம். இன்னும், மனையாளும் மக்களும் வாழ்வுந் தனமுந்தன் வாயின் மட்டே யினமான சுற்ற மயான மட்டே வழிக்கேது துணை என்ற பட்டினத்தாரின் பாடல் கருத்து பாம்பாட்டியின், |