பாலில் வெருகடியாய் - ஆத்தாளே பதிமண்ட லம்கொளவே மேலும் வச்ரகாயமடி - ஆத்தாளே வேதையுமி நீராலே. | 98 |
| | |
பழுக்கும் நவலோகம் - ஆத்தாளே பரமட்ட சித்தியுண்டாம் அழுக்கெடுத்து வெள்ளீயம் - ஆத்தாளே அதில் ஈய நீர்வாங்கும். | 99 |
| | |
சித்திபெற்ற கற்பமடி - ஆத்தாளே தேவ வருடமதில் அத்தியின் தன்பிலமாய் - ஆத்தாளே ஆயிரம் வயதிருப்பாய். | 100 |
| | |
உத்தமர்க்குச் சொன்னேன்நான் - ஆத்தாளே உயர வெளிகண்டதெல்லாம் பத்தியுள்ள பத்தர்கட்கு - ஆத்தாளே பலிக்கும்பார் கண்டாயே. | 101 |
| | |
பத்தியுடன் செய்துவந்தாள் - ஆத்தாளே பரம்பொருளுந் தோன்றுமடி சித்தி அடைந்தவர்க்கு - ஆத்தாளே தெரியுமே சோதியுந்தான். | 102 |
| | |
மாணிக்கத்து உள்ளொளிபோல் - ஆத்தாளே மருவிய சோதிதனைப் பேணித் தொழும்அடியார் - ஆத்தாளே பேசாப் பிரமமடி. | 103 |
| | |
அன்றுமுதல் இன்றளவும் - ஆத்தாளே அறியாப் பருவமதில் என்றும் பொதுவாக - ஆத்தாளே இருந்த ரகசியந்தான். | 104 |
| | |
ஓங்காரங் கொண்டு - ஆத்தாளே உள்மூலந் தான்தெரிந்து | |