உள்ளுணர்வாய் நின்றிருக்கும் - ஆத்தாளே ஓங்காரம் தன்னையுமே எள்ளுளவா கிலுந்தான் - ஆத்தாளே ஏத்தித் துதிப்பாயே. | 106 |
| | |
பாவிகள் தங்களுக்கு - ஆத்தாளே பரிவாக இந்நூலைத் தாவிக் கொடுக்காதே - ஆத்தாளே சண்டாளர் தங்களுக்கே. | 107 |
| | |
அனுபோக கற்பசித்தி - ஆத்தாளே ஆகுமிதைப் படித்தோர் மனுவிக்யா னந்தெரிந்து - ஆத்தாளே வாழ்வார் வெகுகோடி. | 108 |
| | |
ஆறாதாரம் ஞானநூல் கற்றால் எவன் தற்றுறவு பூண்டால் என் மோன சமாதி முயன்றால் என் - தானாகி எல்லாக் கவலையும் ஆற்று இன்புற் றிருப்பதுவே சொல்லாரும் முத்தி சுகம். | |
| | |
மேலத் தெருவாகி விந்துதித்த வீடாகிக் கோலத்தி னாலேயடி கூறும் அறுகோணம் சீலத்தில் முக்கோணம் சேர்ந்தப்பு வீடாகி மூலத்தில் மண்ணாகி - என் ஆத்தாளே முதலெழுத்தைப் போற்றி செய்தேன். | 109 |
| | |
ஆதியெனும் மூலமடி அவ்வோடே உவ்வாகி நீதியெனும் நாளமடி நின்று விசையெழுப்பி சாதிமதி யென்னும் தாகவிடாய் தானடங்கிச் சோதிவிந்து நாதமென்ன - என் ஆத்தாளே சுக்கிலமாய் நின்றதடி. | 110 |