மெய்ஞ்ஞானம் ஐங்கரனைத் தெண்டனிட்டு அருளடைய வேணுமென்று தங்காமல் வந்தொருவன் - என் ஆத்தாளே தற்சொரூபங் கொண்டாண்டி. | 123 |
| | |
உள்ளது ஒளியாக ஓங்காரத்து உள்ளிருந்து கள்ளப் புலனறுக்க - என் ஆத்தாளே காரணமாய் வந்தாண்டி. | 124 |
| | |
ஆதாரம் ஆறினையும் ஐம்பத்தோ ரட்சரமும் சூதானக் கேட்டையெல்லாம் - என் ஆத்தாளே சுட்டான் துருசாலே. | 125 |
| | |
என்னோடு உடன்பிறந்தார் எல்லோரும் பட்டார்கள் தன்னந் தனித்தேனே - என் ஆத்தாளே தானிருக்க மாட்டேண்டி. | 126 |
| | |
கல்லில் ஒளியானைக் கருத்தி விளியாளைச் சொல்லி அழுதாலொழிய - என் ஆத்தாளே துயரம் எனக்கு ஆறாதே. | 127 |
| | |
மண்முதலாய் ஐம்பூதம் மாண்டுவிடக் கண்டேன்டி விண்முதலாய் ஐம்பொறியும் - என் ஆத்தாளே வெந்துவிடக் கண்டேன்டி. | 128 |
| | |
ஆங்காரந் தான்கெடவே ஆறடுக்கு மாளிகையும் நீங்காப் புலன்களைந்தும் - என் ஆத்தாளே நீறாக வெந்துதடி. | 129 |
| | |
போற்றும்வகை எப்படியோ பொறிபேத கம்பிறந்தால் ஆத்தும தத்துவங்கள் - என் ஆத்தாளே அடுக்கழிய வெந்ததடி. | 130 |
| | |
வித்தியா தத்துவங்கள் விதம்விதமாய் வெந்ததடி சுத்துவித்தை அத்தனையும் - என் ஆத்தாளே சுட்டான் துருசறவே. | 131 |