மன்னுயிரைக் கொன்று வதைத்துண்டு ழலாமல் தன்னுயிர்போலெண்ணித் தவமுடிப்ப தெக்காலம். | 15 |
| | |
பாவியென்ற பேர்படைத்துப் பாழ்நரகில் வீழாமல் ஆவியென்ற சூத்திரத்தை யறிவதினி யெக்காலம். | 16 |
| | |
உளியிட்ட கல்லும் உருப்பிடித்த செஞ்சாந்தும் புளியிட்ட செம்பும் பொருளாவ தெக்காலம். | 17 |
| | |
வேடிக்கையுஞ் சொகுசும் மெய்ப்பக்கட்டும் பொய்ப்பகட்டும் வாடிக்கை யெல்லாம் மறந்திருப்ப தெக்காலம். | 18 |
| | |
பட்டுடையும் பொற்பணியும் பாவனையுந் தீவினையும் விட்டுவிட்டுன் பாதம் விரும்புவது மெக்காலம். | 19 |
| | |
ஆமை வருமாட்கண் டைந்தடக்கஞ் செய்தாற்போல் ஊமை யுருக்கொண் டொடுங்குவது மெக்காலம். | 20 |
| | |
தண்டிகையுஞ் சாவடியுஞ் சாளிகையு மாளிகையுங் கண்டு களிக்குங் கருத்தொழிவ தெக்காலம். | 21 |
| | |
அத்தன் இருப்பிடத்தை ஆராய்ந்து பார்த்துநிதஞ் செத்த சவம்போற் றிரிவதினி யெக்காலம். | 22 |
| | |
ஒழிந்தகருத் தினைவைத் துள்ளெழும்புவெள் ளெலும்பாய்க் கழிந்தபிணம் போலிருந்து காண்பதினி யெக்காலம். | 23 |
| | |
அற்ப சுகமறந்தே அறிவையறி வாலறிந்து கெர்ப்பத்தில் வீழ்ந்து கொண்ட கோளறுப்ப தெக்காலம். | 24 |
| | |
கருப்படுத்தி என்னையமன் கைப்பிடித்துக் கொள்ளாமுன் உருப்படுத்தி யாள உடன்படுவ தெக்காலம். | 25 |
| | |
தூண்டு விளக்கணையத் தொடர்ந்திருள் முன்சூழ்ந்தாற்போல் மாண்டு பிழைத்துவந்த வகைதெரிவ தெக்காலம். | 26 |
| | |
தூரியினில் மீன்போற் சுழன்று மனம்வாடாமல் ஆரியனைத் தேடி அடிபணிவ தெக்காலம். | 27 |
| | |
எண்ணூறு யுகமிருந்தும் எய்தாத வீடுபெற வெண்ணீறு பூசி விளங்குவது மெக்காலம். | 28 |