பொற்பூவும் வாசனையும் போதம் அறிந்தோர்க்குக் கற்பூவும் வாசனையும் காணும் கயவருக்கும் கற்பூவும் வாசனையும் கண்டது உண்டே யாமானால் பொற்பூவும் வாசனையின் என் கண்ணம்மா புலன்கள் தெரியவேண்டி. | 39 |
| | |
ஆதிமதி என்னும் அதின் விடாய் தான்அடங்கிச் சோதிவிந்து நாதமெனச் சுக்கிலமாய் நின்றதடி சோதிவிந்து நாமெனச் சுக்கிலமாய் நின்றாக்கால் நீதியுடன் பூர்வபட்சம் என் கண்ணம்மா நிலைதெரிய மாட்டேனோ. | 40 |
| | |
ஞானமிது நாற்பதையும் நலமாக வேதெரிய மோன மயக்கத்தில் முழுதுமே கொட்டிவிட்டேன்; மோன மயக்கத்தை முழுதும் அறிந்தோர்கள் ஞானம் அடைவார்கள் என் கண்ணம்மா நன்மைபெற்று வாழ்வார்கள். | 41 |
| | |
வாத கற்பம் கண்ணிகள் மூலம்நடுவீதி ஆத்தாளே மும்மண்டலத்து அமர்ந்த நீலகண்ட வத்துவைத்தான் - ஆத்தாளே நின்மலனைப் போற்றுவனே. | 42 |
| | |
மேகத்தான் விந்தாச்சு - ஆத்தாளே விசயரவிச் சுண்ணாம்பாம் ஆகச் சிவநீரால் - ஆத்தாளே அட்டசித்தி அவள்சக்தி. | 43 |
| | |
இரவி முகத்தாலே - ஆத்தாளே ஈசன் என்ற உப்பாச்சு வருகங்கை தன்னாலே - ஆத்தாளே மயமாகச் சுத்தம் செய்தே. | 44 |
| | |
முந்தின உப்பிரண்டும் - ஆத்தாளே முழுக்கல்லுப் பொன்னாகத் | |