அக்காரச் சுண்ணாம்பாம் - ஆத்தாளே ஆகரெண்டு சுண்ணமதை உக்காரம் மேற்பூசி - ஆத்தாளே உலையிலே வைத்தூத. | 53 |
| | |
எண்ணெய் எல்லாம் போக்குமடி இருக்கும் சவுக்காரம் சுண்ணமடி மேற்கவசம் - ஆத்தாளே சொல்லுகிறேன் அப்புச்சுண்ணம். | 54 |
| | |
கற்பூரச் சுண்ணாம்பாம் - ஆத்தாளே கலந்திருந்த இண்டு மடி செப்பமுள்ள செயநீரால் - ஆத்தாளே சேர்த்தாட்டி வீரமிட்டு. | 55 |
| | |
வழமலைக்கு - ஆத்தாளே வளமாய்ப் பொதிந்தபின்பு தழலிலே தானாட்டி - ஆத்தாளே சற்குருவாம் உப்பாலே. | 56 |
| | |
உப்புச் சுண்ணங் கற்பூரம் - ஆத்தாளே உண்மை சவுக்காரம் செப்பமுடன் மூன்றுசுண்ணம் - ஆத்தாளே சேர்த்துரவியில் இட்டு. | 57 |
| | |
இக்குருவில் மஞ்சாடி ஆத்தாளே எடுத்துத் துருசில் இட்டு முக்கியமுடன் மேற்கவசம் - ஆத்தாளே முன்பூசி வெயிலில் வைக்க. | 58 |
| | |
சுண்ணாம்பு தங்கியிது - ஆத்தாளே துடிதாளகம் வெளுக்கும் சுண்ணாம்பு வங்கமடி - ஆத்தாளே துடிலிங்கம் கைமாட்டும். | 59 |
| | |
சாதிலிங்கச் சுண்ணாம்பு - ஆத்தாளே தனிலோகச் சுண்ணாம்பாம் | |