Untitled Document
சேலம் மாவட்டம் செவ்வாய்ப் பேட்டையை அடுத்த மகுடம் சாவடி உயர்தரப் பள்ளியின் ‘சகுந்தலா நிலையம்’ கட்டிடத் திறப்பின் போது கவிமணி அனுப்பிய கவிதைகள். இவை சிறு பிரசுரமாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் கீர்த்தனையும் உள்ளது. 1062 - 64 தஞ்சாவூர் கலைக்கூடம் தஞ்சாவூர் கலைக்கூடம் 9-12-1951 அன்று திறக்கப்பட்ட போது வெளியிடப்பட்ட கலைக்கூடமலரில் உள்ள பாடல்கள். இப்பாடல்களுடன் உரைநடைக் குறிப்பும் உண்டு. அது கீழ்வருமாறு : - தமிழ்நாட்டுக் கலைகளெல்லாம் தழைத்தோங்கிய தனிப்பெரும் சிறப்புடைய நகரம் தஞ்சை. அது ஒரு காலம். இன்றோ அதன் பெருமை மங்கிக் கிடக்கிறது. அதற்குரிய காரணங்களை இப்பொழுது ஆராய்ச்சி செய்யத் தேவையில்லை. அந்நியர் ஆட்சி மறைந்து விட்டது. நம்மை நாமே ஆள்கிறோம். நமது முற்போக்கை, கலை வளர்ச்சியைத் தடை செய்ய இங்கு யாருமே இல்லை. பொய்யாக் குலக்கொடி பொன்னியும், தரணிக்கு உணவூட்டும் தஞ்சை வளமும் இருக்கத்தான் செய்கின்றன. பண்பாட்டில் சிறந்த இன்றமிழ் மக்களும் இருக்கவே செய்கிறார்கள். உண்மையான உழைப்பும், ஊக்கமும், முற்போக்கில் ஆர்வமுமே நமக்கு வேண்டியவை. இவை உண்டானால் கலைச் செல்வத்தின் கருவூலமாக விளங்கிய பண்டைத் தமிழ்த் தஞ்சையை வெகு விரைவில் காணமுடியும். அதை அடிப்படையாகக் கொண்டு அதன் மேலும் செல்ல முடியும்.
இப்பொழுது கலையறிஞர்கள் - கலா ரசிகர்கள் சிலர் சேர்ந்து கலைக்கூடம் ஒன்று நிறுவத் தொடங்கி இருப்பதை அறிவேன். அளவற்ற மகிழ்ச்சி கொண்டேன். அவர்கள் முயற்சி வெற்றி அடைவதாக,தஞ்சைக் கலைக்கூடம் நீடூழிவாழத் திருவருள் உண்டாவதாக, (சி.பி.) 1062 பா.பே. (சி.பி.) வரி 1-2 எண்டிசையும் போற்ற எழிலமைய மக்களின்று தண்ட மிழ்ச் செல்வக் கலைக்கூடம் 1064 ம.மா.தொ.இ.பா. (சி.பி.) | 1065 தஞ்சை தேவி நாடகசபை ம.மா.தொ.இ.பா. | |
|
|