பக்கம் எண் :

சோழப் பேரரசின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் 275

    அரசுகளை கட்ட பரசு ராமன்
    மேவரும் சாந்திமத் தீவும், அரண்கருதி
    இருத்திய செம்பொன் திருத்தகு முடியும்,
    பயங்கொடு பழிமிக முயங்கியில் முதுகிட்டு
    ஒளித்த சயசிங்கன் அளப்பரும் புகழொடு
    பீடியல் இரட்டை பாடி ஏழரை
    இலக்கமும், நவநிதிக் குலப்பெரு மலைகளும்
    விக்கிரம வீரர் சக்கரக் கோட்டமும்
    முதிர்பட வல்லை மதுரை மண்டலமும்,
    காமிடை வளைஇய நாமனைக் கோணமும்,
    வெஞ்சின வீரர் பஞ்சப் பள்ளியும்,
    பாசுடைப் பழன மாசுணி நேசமும்,
    அயர்வில் வண்கீர்த்தி ஆதிநகர் அகவையில்
    சந்திரன் தொல்குலத்து இந்திர ரதனை
    விளையமர்க் களத்துக் கிளையொடும் பிடித்துப்
    பலதனத் தொடுநிறை குலதனக் குவையும்,
    கிட்டருஞ் செறிமிளை ஒட்ட விஷயமும்,
    பூசுரர் சேரும்நற் கோசலை நாடும்
    தன்ம பாலனை வெம்முனை யழித்து
    வண்டுறை சோலைத் தண்ட புத்தியும்,
    இரண சூரனை முரணுகத் தாக்கித்,
    திக்கணை கீர்த்தித் தக்கண லாடமும்,
    கோவிந்த சந்தன் மாவிழந்து ஓட,
    தங்காத சாரல் வங்காள தேசமும்
    தொடுகழற் சங்கு கொட்டன்மகி பாலனை
    வெஞ்சமர் வளாகத்து எஞ்சுவித் தருளி,
    ஒண்திறல் யானையும், பெண்டிர்பண் டாரமும்,
    நித்தில நெடுங்கடல் உத்தர லாடமும்
    வெறிமலர்த் தீர்த்தத்து எறிபுனல் கங்கையும்,
    அலைகடல் நடுவில் பலகலம் செலுத்திச்
    சங்கிராம விசையோத் துங்கவர்மன் ஆகிய
    கடாரத்து அரசனை வாகையம் பொருகடல்
    கும்பக் கரியொடும் அகப்ப டுத்து,
    உரிமையின் பிறக்கிய பெருநிதிப் பிறக்கமும்,
    ஆர்த்தவன் அகநகர்ப் போர்த்தொழில் வாசலில்
    விச்சா திரத்தோ ரணமும் மொய்த்துஒளிர்
    புனைமணிப் புதவமும், கனமணிக் கதவமும்,
    நிறைசீர் விசயமும், துறைநீர்ப் பண்ணையும்,
    வன்மலை யூர்எயில் தொன்மலை யூரும்,