பக்கம் எண் :

16கட்டுரைக் கசடறை என்னும் வியாச விளக்கம்

10. இய யந்திரம் - இயந்திரம் முதல்
    யந்திரம் - எந்திரம் முதல்
    கெடுதல் யூகி - ஊகி முதல்
11. ர் ரு தர்மம் தருமம் இடை
    ன் தர்மம் தன்மம்   இடை
  ர்ண ண்ண நிர்ணயம் - நிண்ணயம் இடை
    ன்ன கர்ணன் - கன்னன்   இடை
  ர்ந ன்ன துர்நிமித்தம் - துன்னிமித்தம் இடை
12. ல் ற் அல்பம் - அற்பம் இடை
13. பிக்ஷிா -பிச்சை கடை
14. நதீ - நதி கடை

     வடசொற்களின் இடையிலும் கடையிலும், தகரத்தொடு சேராது தனித்தும் இரட்டித்தும் வரும் நகரத்தை நகரமாயெழுதுவதினும் னகரமா யெழுதுவது நலம்.


உ-ம்: அயநம் - அயனம். ஜந்நியம் - ஜன்னியம், மநு - மனு.


     கர்த்தா, அர்த்தம் முதலிய வடசொற்களிலுள்ள ரகரமெய் இக் காலத்து உகரமேற்றாதும் எழுதப்படும்.


     வடசொற்களின் (அல்லது திசைச்சொற்களின்) முதலில் மெய்வரின், அம் மெய்யின்மேல் ஏற்றதோர் உயிர்க்குறில் ஏற்றப்படும்; அல்லது அம் மெய் நீக்கப்படும்.


     உ-ம்:
     த்ராவகம் - திராவகம் (உயிர் ஏறுதல்)
     ஸ்தானம் - தானம் - (மெய் கெடுதல்)


     வடசொற்களிலும் திசைச்சொற்களிலும் முதலில் ர, ல, என்னும் எழுத்துகள் வரின், அவற்றுக்குமுன் ஓர் ஏற்ற உயிர்க்குறில் சேர்த்தெழுதப்படும்.
     உ-ம்:
    ராமன் - இராமன் ரத்நம் - அரதனம், இரத்தினம்
    லாபம் - இலாபம் லோபி - உலோபி
    ரோமர், ரொட்டி முதலிய சில ரகரமுதற் சொற்களும், எல்லா யகர முதற்சொற்களும் இயல்பாக எழுதப்படினும் இழுக்கின்று.


     வடசொற்களின் இடையில், வேற்றுநிலை மெய்ம்மயக்கில் (அதாவது மெய்கள் தம் உயிர்மெய்யோடு கூடாது பிற உயிர்மெய்களோடு கூடிவரின்), தமிழ் முறைக்கு மாறான மெய்களின்மேல் ஓர் ஏற்ற குறில் ஏற்றப்படும்; இசைந்தவிடத்து அம் மெய்கள் இரட்டிக்கவும் பெறும்.