வாளி1-பாலி
வள்-வாள்-வாளி
= வட்டமாயோடுகை.
"மாதிர
முறப்பல வாளி போதுமால்" (பாரத. சூது. 121).
"வாளி
வெம்பரி" (பாரத. குரு. 108).
மா.அ.வி.
சுற்றளவு (circumference) என்று மட்டுங் குறித்துள்ளது.
வாளி2-வாலீ
வள்-வாள்-வாளி
= வளையம், வளைந்த அல்லது வளைய
வடிவான காதணி.
"வாளிமுத்தும்"
(குமர. பிர. முத்து. பிள்.11).
வாளிகை-வாலிகா
வாளி-வாளிகை
= வளைய வடிவான காதணி.
"சுட்டிகையும்
வாளிகையும்" (பதினொ. திருக்கைலாய. 68).
விக்கல்-ஹிக்கா
விக்கு-விக்குள்,
விக்கல்.
"உண்ணுநீர்
விக்கினா னென்றேனா" (கலித். 51).
"நாச்செற்று
விக்குள்மேல் வாராமுன்" (குறள். 355).
"நெஞ்சே
விக்கல் வராது கண்டாய்"
தெ.
வெக்கில்லு, க. பிக்கலு (b), ம. எக்கில்.
E.
hicket, hiccup, hiccough.
இது
ஒலிக்குறிப்புச் சொல்லாயினும், ஆரிய இனத்தினும் தமிழ் இனம் முந்தியதாலின், இது
தமிழ்ச்சொல்லே யெனத் தெளிக.
விட்டம்-விஷ்ட
விள்-விடு-விட்டம்.
விள்ளுதல் = பிரிதல். விடுதல் = பிரித்தல்.
விட்டம்
= 1. குறுக்காகச் சென்று வட்டத்தை இரண்டாகப்
பிரிக்கும் கோடு.
2.
குறுக்குத்தரம்
"இட்டிகை
நெடுஞ்சுவர் விட்டம் வீழ்ந்தென" (அகம்.167).
"குருட்டுப்
பூனை விட்டத்திற் பாய்ந்தது போல" (பழமொழி).
விட்டை-விஷ்டா
விள்ளுதல்
= நீங்குதல், வெளிப்படுத்துதல். விள்-விட்டை.
"கழுதை
விட்டையைக் கைநிறைய ஏந்தினாற் போல" (பழமொழி)
|