|
விடை-வ்ருஷ, வ்ருஷப
விடைத்தல்
= விம்முதல், பருத்தல், விறைத்தல், செருக்குதல்.
விலங்கினத்திற்
பெரும்பாலும் ஆண் பருத்திருப்பதால், விடை
என்னும் சொல் விலங்கின் ஆண்பாலை உணர்த்தும்.
விடை=1.
காளை. "பீடுடைய போர்விடையன்" (தேவா. 539:2).
2.
எருமைக்கடா. "மதர்விடையிற் சீறி" (பு. வெ. 7:14).
3.
வெள்ளாட்டுக்கடா.
"மாடந்தோறும்
மைவிடை வீழ்ப்ப" (புறம். 33).
4.
ஆண்மரை. "மரையான் கதழ்விடை" (மலைபடு. 331).
5.ஆண்வெருகு.
"வெருக்கு விடையன்ன" (புறம்.324).
விடை-விடலை = இளங்காளை, காளை போன்ற மறவன்,
பாலைநிலத் தலைவன்.
விடலை.
L. vitula, Gk. italos, Skt. vatsa.
விடை
என்பது விலங்கினத்தின் ஆண்பாலைக் குறிக்கும் பொதுச்
சொல்லாயினும், வழக்கு மிகுதிபற்றிச் சிறப்பாகக் காளையையே உணர்த்தும்.
வடவர்
காட்டும் மூலம் வ்ருஷ் (மழைபெய்) என்பதே. மழைக்
கருத்தினின்று, ஆண்மைக் கருத்தை இருவேறு வகையில் கடுகளவும்
பகுத்தறிவிற் கொவ்வாதவாறு வலிந்து வருத்தியிருக்கின்றனர்.
வ்ருஷ்
= மழைபெய் (இ.வே.), மழைபோல் அம்பைப் பொழி,
ஆண்மைகொள், பிறப்பிப்பு ஆற்றல் பெறு.
வ்ருஷன்-("ஒருகால்,
முதலில் 'பெய்கின்ற, தெளிக்கின்ற,
சினைப்பிக்கின்ற") ஆண்மையுள்ள, வலிமையுள்ள,
மைந்துள்ள
(இ.வே.)ஆடவன், ஆண், ஆண்விலங்கு, காளை, ஆண்குதிரை,
தலைவன்.
வ்ருஷ=ஆடவன்,
ஆண், கணவன், ஆண்விலங்கு, காளை,
விடையோரை, தலைவன், தலைசிறந்தது.
வ்ருஷப
(bh) = வ்ருஷன் (இ.வே.).
வ்ருஷப-ருஷப
= காளை (இ.வே.).
வ்ருஷப
என்பதன் முதற்குறையே ருஷப என்பது. ஆயினும், வடவர்
அது வந்த வழியை அறியாமலோ, வடசொல்லாகக் காட்டல் வேண்டி
வேண்டுமென்றோ, ருஷ்2 என்பதை ருஷப என்னும் வடிவிற்கு மூலமாகக்
காட்டுவர்.
ருஷ்2
= செல், இயங்கு; குத்து, கொல்; உந்து, தள்.
|