பக்கம் எண் :

187

வடிவேலு முதலியார், டி (20-நூ)

வாழ்விடம்:சென்னை.
பிறப்பு:1883.
நூல்:‘ஞானியார் சாமிகள் வாழ்க்கை வரலாறு’ (1948).

வடுகநாதக் கவிராயர் (18-நூ)

வே.பெ:வள்ளல் வடுகநாதக் கவிராயர்.
ஊர்:மல்லையூர்.
தந்தை:மதுரகவிராசர்.

இவர் புலவராகவும் புரவலராகவும் விளங்கினார். பஞ்ச காலத்தில் மக்களுக்கும் புலவர்களுக்கும் ஏற்பட்ட உணவுப்பசியை நீக்கியமையால் வள்ளல் என்று அழைக்கப் பெற்றார். இவருடைய உணவுக் கொடையையும் புலமைச் சிறப்பையும் கவிஞர்கள் வியந்து போற்றியுள்ளனர். இவர் கவிபாடி யானைப் பரிசில் பெற்றவர்.

நூல்:தனிப்பாடல்கள்.

வடுகநாத தேசிகர் - 1 (17-நூ)

ஊர்:திருவாரூர்.

இவர் இலக்கண விளக்கம் வைத்தியநாத நாவலரின் 4-வது மகனாவர். பிற்காலத்தில் சீர்காழியில் தங்கியிருந்ததால் சீர்காழி வடுகநாத தேசிகர் என்று அழைக்கப் பெற்றார்.

நூல்:திருமுல்லை வாயில் புராணம்.

இந்நூல் 415 பாடல்களை உடையது.

வடுகநாத தேசிகர் - 2 ( )

நூல்:புள்ளிருக்கு வேளூர்ப் புராணம்.