இந்நூல் அட்சயலிங்கத் தம்பிரான் என்பவரின் வேண்டு கோளின்படி 1133 செய்யுட்களால் இயற்றப் பெற்றது. வைத்தீசுவரன் கோயில் என வழங்கும் புள்ளிருக்குவேளூரின் சிறப்பைக் கூறுவது. வண்டப் புலவர் ( ) இவரது வசைகவிப்பாடல்களில் பொன்மொழிகள் மிகுதியாகக் காணப்பெற்றமையால் வண்டப் புலவர் என்று அழைக்கப் பெற்றார். வாக்குப்பலிதம் உள்ளவராகக் கருதப் பெற்றார். தம்முடைய முப்பதாவது வயதில் மதுரையை விட்டுப் புறப்பட்டு ஊர் ஊராகச் சுற்றி சேலத்தைச் சேர்ந்த நாமகிரிப்பேட்டையில் நிலையாகத் தங்கி வாழ்ந்து வந்தார். செல்வர்கள் மீது செய்யுட்கள் பாடிப் பரிசுபெற்று வாழ்க்கை நடத்தினார். தம்மை எள்ளியவர்கள் மீது வசை கவி பாடுவார். வண்ணக் கஞ்சாத்தனார் ( ) இவர் திருவள்ளுவ மாலைச் செய்யுட்களைப் பாடிய புலவர்களுள் ஒருவர். வண்ணக்கன் என்பது நாணய ஆய்வாளர் என்று பொருள்படும். | நூல்: | திருவள்ளுவமாலையில் ‘ஆரிய முஞ்செந்தமிழுமாராய்ந்து’ என்று தொடங்கும் செய்யுள். |
வண்ணக் களஞ்சியப் புலவர் (19-நூ) | வே. பெ: | ஹமீது இபுறாகீம். | | ஊர்: | இராமநாதபுர மாவட்டம்.முதுகுளத்தூர் கோட்டம் மீசல். |
இவருடைய பாக்களில் வண்ணப்பாக்கள் அழகாக அமைந்திருந்ததாதல் வண்ணக் களயஞ்சியப் புலவர் என்று அழைக்கப்பெற்றார்.
|