பக்கம் எண் :

189

நூல்:

இராஜ நாயகம், தீன் விளக்கம், குத்பூ நாயகம், அலிபாதுஷா நாடகம், இராஜ நாயகம் என்ற நூல் நபியின் கதையாகும். 46 படலங்களில் 2240 செய்யுட்களைக் கொண்டது. 1845-இல் இயற்றியது.

வண்ணக்கன்சோரு மருங்குமரனார்                       (சங்ககாலம்)

இவர் பெயர் வண்ணக்கன் சொருமருங்குமரனார் என்றும் காணப்படுகின்றது. வண்ணக்கன் என்பதனால் இவர் நாணய ஆய்வாளராகவோ, நோட்டக் காரராகவோ செயலாற்றி இருத்தல் வேண்டும்.

நூல்:நற்றிணை 257.

வண்ணப் பரிமளம் (19-நூ)

ஊர்:மதுரையை அடுத்த புளியங்குளம்.
தந்தை:ஒல்லாமியா சையது முகம்மதுப் புலவர்.
நூல்:‘முகமதியர் காவியம்’.

வண்ணப்புறக் கந்தரத்தனார்                           (சங்ககாலம்)

இவர் இயற்பெயர் கந்தரத்தன் என்பது. இவர் வண்ணப் புறக்கல்லாடனார் எனவும் திரித்து வழங்கப்படுகிறார். இவர் தொடராற் பெயர் பெற்ற சங்கப் புலவர்களுள் ஒருவர். இவர் பாடிய நற்றிணைச் செய்யுளில் (71) “வண்ணப் புறவின செங்காற்சேவல்” என்ற தொடரைப் பயன்படுத்தி உள்ளமையால் இப்பெயர் பெற்றார் என்பர்.

நூல் :அகம் 49; நற்றிணை 71.

வணிகன் சடையன் ( )

ஊர்:குறுகாபுரி.
நூல்:குறுகை மான்மியம்.