வயிரவலிங்கம் பிள்ளை (19-நூ) | ஊர்: | பெருநாழி. | | நூல்: | பொந்தம்புளி இராமலிங்கம் பிள்ளை என்பவர் இயற்றிய கந்தபுராண வண்ணம் என்னும் நூலினைப் பாராட்டி வழங்கிய சிறப்புப்பாயிரம். |
வரதநஞ்சைய பிள்ளை, அ (20-நூ) | ஊர்: | சேலம் மாவட்டம் பெருமாள் பாளையம். | | தாய்: | வரதாயி அம்மாள்; தந்தை: அப்பாச்சாமிப்பிள்ளை; கருணீகர். | | வாழ்ந்தகாலம்: | 1-9-1877 - 11-7-1956. |
இவர் தொடக்கக் கல்வியைத் தம் தந்தையிடம் கற்றார். இளமையில் தமது தந்தையை இழந்து பதினாறாவது வயதில் நல்லிப்பாளையம் என்ற ஊரில் ஆசிரியராகப் பணியேற்றார். துறையூரில் இருந்த நாகலிங்கம் பிள்ளை என்பவரிடம் இலக்கண நூல்களையும், சிங்கத்தம்பூரில் முத்துவீரம ரெட்டியாரிடம், இலக்கிய நூல்களையும் பயின்றார். இவர் தொடக்கப்பள்ளி ஆசிரியராகவும், ஊர்க் கணக்குப் பிள்ளையாகவும் வாழ்க்கையை நடத்தினார். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தார் இவரைப் பாராட்டி, கா.ர. நமச்சிவாய முதலியார் தலைமையில் தங்கத்தோடா பரிசளித்தனர். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளிவிழாக் கொண்டாட்டத்தில் தமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளை விருப்பப்படி ‘தமிழரசி குறவஞ்சி’ என்னும் நூலை ஞானியாரடிகளின் தலைமையில் அரங்கேற்றினார். ஞானியாரடிகளின் அறுபதாம் ஆண்டு நிறைவு விழாவில் சில தனிச் செய்யுட்கள் எழுதி அவர்களைப் பாராட்டினார். செந்தமிழ்ச்செல்வி, தமிழ்ப்பொழில், சிவநேசன் முதலிய திங்களிதழ்களில் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். | நூல் : | துருவோபாக்யானம், நாரிவிநாயகர் மும்மணிக்கோவை, தமிழரசி குறவஞ்சி. |
|