பக்கம் எண் :

191

வரதப்ப முதலியார் (19-நூ)

வே.பெ:தொல்காப்பியம் வரதப்ப முதலியார்.
நூல்:இராமானுச கவிராயர் இயற்றிய நன்னூல் விருத்தியுரைக்கு சாற்றுக் கவி.

வரத பண்டிதர் (18-நூ)

வே.பெ.வரதராஜ பண்டிதர்.
ஊர்:ஈழநாட்டில் சுன்னாகம்.
தந்தை:அரங்கநாத ஐயர்.

இவர் தமிழ் இலக்கண இலக்கியங்களிலும், வேதாந்த சித்தாந்த சாத்திரங்களிலும், மருத்துவம், காலக் கணிதம் முதலிய துறைகளிலும் சிறந்த அறிவுடையவராக விளங்கினார். இவர் வாக்குப் பலிதமுடைய கவிஞராக விளங்கியமையால் வரகவி, என அழைக்கப் பெற்றார்.

நூல் :

சிவராத்திரிப் புராணம், ஏகாதசிப் புராணம். பிள்ளை விடுதூது, பிள்ளையார் கதை, அமுதாசரம் (மருத்துவ நூல்).

இவர் பாடிய சிவராத்திரி புராணம் ரெங்கநாதர் என்பவர் பாடிய சிவராத்திரிப் புராணத்தினின்றும் வேறானது.

வரதராச அடிகள் (19-நூ)

ஊர்:தில்லை.

இவர் இராமலிங்க அடிகளின் நெறியைப் பின்பற்றி வடலூரில் வாழ்ந்திருந்தவர்.

நூல்:மரணமில்லாத வாழ்வு.