பக்கம் எண் :

வரதராச ஐயங்கார்

வரதராச ஐயங்கார் (19-நூ)

நூல்:மகாபாகவதம் - இரண்டாம் புத்தகம் (1891).

மகாபாகவத புராணத்தில் ஏகாதசி புராணமென்று வழங்குகின்ற உருக்கு மாங்கதப் படலம் (1868), மகாபாகவதம் துவாதசிச் சரித்திரம் (1890).

மகாபாகவதம் - இரண்டாம் புத்தகம்:

இந்நூல் புராண பாகவதம் எனப்படும் மகாபாகவதத்தின் மொழி பெயர்ப்பு. கண்ணன் திருவவதாரத்தைச் சிறப்பாகக் கூறுவது. தசாவ தாரங்களும் இதில் கூறப்பட்டுள்ளன; 4483 செய்யுட்களைக் கொண்டது.

மகாபாகவதம் - உருக்கு மாங்கதப் படலம்:

ஏகாதசியின் சிறப்பை எடுத்துக் காட்டும் வரலாறாகிய உருக்கு மாங்கத வரலாறு பற்றியது; 315 செய்யுட்களைக் கொண்டது, இதற்கு திருவேங்கட லட்சுமணதாசர் என்பவர் உரை எழுதியுள்ளார்.

மகாபாகவதம் - துவாதசிச் சரித்திரம்:

இந்நூலில் மகாபாகவதத்தில் உள்ள அம்பரிஷப் படலமும் மச்சாவதாரப் படலமும், பொழிப்புரையுடன் அமைந்துள்ளது. பால பாரதி முத்துச்சாமி ஐயர் என்பவர் உரை எழுதியுள்ளார்.

வரதராச ஐயர் (26-நூ)

ஊர்:திருமாகறல்.
நூல்:‘காரண சார கதா தோத்திரப்பா’.

வரதராச தாசர் (20-நூ)

ஊர்:ஸ்ரீவில்லிபுத்தூர்.

இவர் பெருமாள் கோயில் உத்தம வரதராசதாசர் என்றும் அழைக்கப் பெற்றார். நாலாயிரத்திவ்யப் பிரபந்தம் முதலிய நூல்களில் சிறந்த பயிற்சியுடையவர்.

நூல்:வைணவப் பெரியார் ஒருவர் நூலுக்கு வழங்கிய சிறப்புப் பாயிரம்.