வரதராச தீட்சிதர் (19-நூ) | நூல்: | இந்து தேச சரித்திரம் (1890). |
இது ஆதிகாலந் தொடங்கி எழுதப் பெற்றது. வரதராசப் பிள்ளை - 1 (19-நூ) | ஊர்: | கட்டளை | | நூல்: | திருநாராயணபுரக்கலம்பகம் (1891). |
இந்நூல் மேலைக்கோட்டையென்னும் திருநாராயணபுரத்தே எழுந்தருளியுள்ள பெருமானைக் குறித்த துதிப்பாமாலையாகும்; 100 செய்யுட்களைக் கொண்டது. வரதராசப் பிள்ளை - 2 ( ) | நூல்: | அருணகிரிப் புராணம், பாலையசுவாமிகள் பதிற்றுப் பத்தந்தாதி, திருக்கடமல்லை பதிற்றுப்பத்தந்தாதி, திருமழிசைப் பதிற்றுப்பத்தந்தாதி, வைகுந்த சதகம். |
வரதராச பண்டிதர், அ (19-நூ) | நூல்: | ஏகாதசி புராணம் (1898) சிவராத்திரி புராணம் (1881). |
ஏகாதசி புராணம்: இந்நூல் ஏகாதசி நோன்பின் சிறப்பைக் கூறுவது. கடவுள் வாழ்த்து நீங்கலாகக் காலநிர்ணயச் சருக்கம், உருக்கு மாங்கதச் சருக்கம், வீமேகாதசிச்சருக்கம் என மூன்று சருக்கங்களை உடையது; 258 செய்யுட்களைக் கொண்டது. சிவராத்திரி புராணம்: இந்நூல் சிவராத்திரி நோன்பின் சிறப்பினைக் கூறுவது; 715 செய்யுட்களைக் கொண்டது.
|