பக்கம் எண் :

வரதராச பாரதிகள்

வரதராச பாரதிகள் (19-நூ)

ஊர்:புனல்வேலி.
நூல்:

ஊற்றுமலைப் பெருநிலக்கிழார் இருதயாலய மருதப்பத் தேவர்மீது பாடிய பாடல்கள்.

வரதராச முதலியார் (19-நூ)

ஊர்:காணியம் பாக்கம்.
நூல்:தாது வருடப் பஞ்சத்தின் ஓரடிச் சிந்து (1877). வள்ளிச் சிந்து (1881).

முதல் நூல் தாது வருடத்தில் நிகழ்ந்த பஞ்சநிலைச் செய்தியினையும் மக்கள் பட்ட துயரினையும், அரசினர் செய்த உதவிகளையும் குறித்துப் பாடப் பெற்றது.

இரண்டாவது நூல் முருகன் வள்ளியம்மையைத் திருமணம் செய்து கொண்ட நிகழ்ச்சியைச் சிந்துப் பாடலில் தருவது. இசை அமைதியுடன் பாடுவதற்கு ஏற்ற சிந்து மெட்டில் அமைந்துள்ளது.

வரதராசர் (20-நூ)

ஊர்:செக்கார்பாளையம்.
நூல்:தர்மாங்கத சரித்திரம்.

வரதராசுலு நாயுடு - 1 (19-நூ)

ஊர்:கொங்கு நாடு.

இவர் வாக்குப் பலிதமுள்ள புலவராகக் கருதப்பட்டார். தனிப் பாடல்கள் பல பாடியுள்ளார்.

நூல்:மகாபதிவிரதைகளின் கதை.

வேதாந்தஸாரம், ஷட்சக்கரவர்த்தி இந்திரஜாலக் கதைகள், ஜட பரதோபாக்கியானம்.