பக்கம் எண் :

195

வேதாந்த ஸாரம்:

இந்நூல் கிருஷ்ணனுக்கும் உத்தவனுக்கும் நிகழ்ந்த உரையாடல் பற்றியது. போகல சேஷாசல நாயுடு உரைநடையில் தெலுங்கு மொழியில் இயற்றியதன் தமிழாக்கம். ஆத்மா, இலட்சணம் முதலிய தத்துவப் பொருள் பற்றி விளக்குவது.

வரதராசுலு நாயுடு - 2 (19-நூ)

இவர் போகல ராம கோபால சேஷாசலம் நாயுடு தெலுங்கு மொழியில் எழுதிய ஜடபரதோபாக்கியானம், ஸ்ரீராம ஹிதயம் என்னும் ஷட்சகரவர்த்திகளின் இந்திர ஜாலக்கதைகள், சுத்த நிராலம்ப மார்க்கம் என்னும் மூன்று நூல்களையும் அதே பெயர்களுடன் தமிழாக்கம் செய்துள்ளார்.

வரதாச்சாரியார், ஈகை (19-நூ)

நூல்:புருஷ சாமுத்திரிகம் (1892).

வரதாச்சாரியார், உ.வே (19-நூ)

ஊர்:களக்காட்டூர்.

இவர் வடமொழியிலும் தென்மொழியிலும் புலமை பெற்றவர். ‘பிருகந் நாரதீய புராணம்’ என்னும் நூலுக்குத் தமிழில் சிறப்புப்பாயிரச் செய்யுட்கள் அளித்துள்ளார்.

நூல்:பராசர ஸ்மிருதி (தமிழாக்கம்).

இந்நூல் வடமொழி மூலத்திலிருந்து தமிழாக்கம் செய்யப்பெற்றது.

வரதாச் சாரியார், க (19-நூ)

நூல்:கருட புராண வசனம் (1884).

வடமொழியில் வேதவியாசர் செய்த பதினெட்டுப் புராணங்களுள் கருட புராணம் ஒன்று. இதனை அனைவரும்