எளிதில் தெரிந்து கொள்ளும் பொருட்டு நூலாசிரியர் உரைநடையில் அமைத்துள்ளார்; உரைநடை 68 பக்கங்களில் அமைந்துள்ளது; 38 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. வரதாச் சாரியார், சர்க்கரை (20-நூ) இந்நூல் ஒரு நாடக நூல். வரதுங்கராம பாண்டியன் (16-நூ) | வே.பெ: | வீரபாண்டியன், அபிராம சுந்தரேசுவரன். | | தந்தை: | பராக்கிரம குலசேகர பாண்டியர். |
இவர் தென்பாண்டி நாட்டிற் சில பகுதிகளைக் கரிவலம் வந்த நல்லூரைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செலுத்தினார். இவர் கி.பி. 1588-இல் ஆட்சி பெற்றார் ஆதலால் 16-ஆம் நூற்றாண்டினராவர். அதிவீரராம பாண்டியனின் தம்பியாகிய இவர். சேரவேந்தன் ஒருவனை வென்றார். எனினும், வல்லம் என்ற இடத்தில் நடைபெற்ற போரில் வெற்றி பெற்றார் என்றும் கல்வெட்டால் தெரிய வருகின்றது. வேம்பற்றூர் ஈசான முனிவர் இவரது ஞானாசிரியராக விளங்கினார் என்பது இவரெழுதிய நூல்களில் உள்ள குரு வணக்கத்தால் தெரியவருகிறது. இவர்தம் மனைவியாரும் இவரைப் போலவே சிறந்த புலமை உடையவராகத் திகழ்ந்தார். அதிவீரராமன் இயற்றிய நைடதத்தைக் குறித்து அது ‘நாய் விரைந்தோடி இளைத்தாற் போன்ற தன்மையுடைத்து’ என்று கூறியதாக ஒரு செவி வழிச்செய்தி உண்டு.
|