பக்கம் எண் :

வரதுங்கராம பாண்டியன் மனைவி

இவை அதிவீரராம பாண்டியனால் பாடப் பெற்றவை என்றும் ஒரு கருத்து உண்டு.

வரதுங்கராம பாண்டியன் மனைவி (16-நூ)

வரதுங்கராமன் கி.பி. 1588-இல் பட்டத்துக்கு வந்தவனாதலால் அவன் மனைவி 16-ஆம் நூற்றாண்டினராவர். இவர் இயற்பெயர் தெரியவில்லை. சிறந்த புலவராக விளங்கினாரென்று தெரிகிறது.

நூல்:தனிப்பாடல்கள்.

வரதையர் (19-நூ)

நூல்:திராவிட பால நீதி (1889).

வரதையன் ( )

வே.பெ:குறட்டி வரதையன்.

வடார்க்காடு மாவட்டம் திருவல்லத்துச் சிவாலயத்துள்ள கல்வெட்டொன்றில் இவர் பெயர் காணப்படுகின்றது.

நூல்:வல்லை அந்தாதி.

வல்லை என்பது வல்லம் என்ற ஊர். இது வடாற்காடு மாவட்டம் குடியாத்தம் கோட்டத்தில் உள்ளது. இவ்வூரிலுள்ள வில்வ நாதேஸ்வரர் என்ற சிவன் கோயிலிலுள்ள சிவபெருமாள் மீது பாடப் பெற்றதே வல்லை அந்தாதி. இந்நூல் பாடியதற்காக இக்கோயில் அதிகாரிகள் புலவருக்கு 100 குழி நிலத்தைப் பரிசாக அளித்துள்ளனர். இவர் பாடிய நூல் மறைந்துபோன தமிழ் நூல்களில் ஒன்று.

வரந்தருவார் (14-நூ)

இவர் பாரதம் பாடிய வில்லிபுத்தூராரின் மகனார் ஆவர். தந்தையாரிடமும், பிறரிடமும் கல்வி கற்றுச் சிறந்தவர். வில்லிபுத்தூரார் பாடாது விட்ட பாரதத்தின் எஞ்சிய பகுதியை இவர்