பக்கம் எண் :

வரிசை முகியித்தீன் புலவர்

இவர் வடமொழியிலும் தமிழ் மொழியிலும் புலமை பெற்றிருந்தார். இவர் இயற்றிய நூல்கள் சில பதிப்பிக்கப் பெறாமல் மறைந்தொழிந்தனவாகத் தெரிகிறது. இவருடைய வரலாற்றைச் சங்குண்ணி என்ற மலையாளக் கவிஞர் மலையாளமொழியில் இயற்றியுள்ளார்.

நூல்:திருச்செந்தூர் சண்முக சதகம், திருக்குறுங்குடி நம்பி சதகம்.

வரிசை முகியித்தீன் புலவர் ( )

ஊர்:மதுரை.
நூல்:சக்கூன் படைப்போர் (1871).

இந்நூல் சக்கூனை நபிவென்ற கதையைக் கூறுவது, 880 கண்ணிகளில் அமைந்தது.

வருமுலையாரித்தி                                   (சங்ககாலம்)

இவர் சங்ககாலப் பெண்பாற் புலவர்களுள் ஒருவர். இவர் பெயருக்குரிய காரணம் விளங்கவில்லை.

நூல்:குறுந்தொகை 176.

வலங்கை மீகாமன் ( )

நூல்:அறிவானந்த சித்தியார்.

இது ஒரு வேதாந்த நூல்; 326 செய்யுட்களைக் கொண்டது.

வள்ளலார் சீடர் ( )

நூல்:பஞ்சாக்கர மாலை.