இளம்பூரணர் தமது உரையில் வளையாபதிச் செய்யுளை எடுத்துக் காட்டியுள்ளமையால் இந்நூல் 11-ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டதெனக் கொள்ளலாம். வன்தொண்டர் (19-நூ) | வே.பெ.: | நாராயண செட்டியார். | | ஊர்: | தேவகோட்டை. | | தந்தை: | அண்ணாமலைச் செட்டியார்; தனவைசியர். | | மறைவு: | 28-6-1882. |
நாராயண செட்டியார் கடுமையான நோன்புகளும் ஒழுக்கச் சிறப்பும் கொண்டு மன உறுதிபடைத்துத் திகழ்ந்ததால் வன்தொண்டர் என்ற சிறப்புப் பெயர் இவருக்கு வழங்கப் பெற்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் பெரும் புலவராக விளங்கிய மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களே இப்பெயரைச் செட்டியாருக்கு வழங்கிச் சிறப்பித்தார். பின்னர் இப்பெயராலேயே இவர் அழைக்கப் பெற்றார். வன்தொண்டரின் தந்தையாரும் முன்னோர்களும் அறச்செயல்களில் நாட்டமுடையவர்கள். திருப்பெருந்துறையில் உணவு அறச்சாலை நிறுவியவர்கள். இக்குடும்பத்தில் பிறந்த வன்தொண்டர் இளமையில் கல்வி கற்குங் காலத்தில் அம்மைநோய் கண்டு கண்களை இழந்தார். எனினும் பிறரைப் படிக்கச் சொல்லி நீதி நூல்கள், பிரபந்தங்களைக் கற்றார். அறிஞர்களைத் தேடிச் சென்று கல்வி கற்ற சிறப்புடையவர். கீழ் வேளூர் சுப்பிரமணிய தேசிகரிடம் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். அரியக்குடி முதலிய இடங்களில் வைணவ நூல்களைக் கற்றார். கண்பார்வை இழந்திருந்தும் பாடநூற் கருத்துக்களை எளிதாகவும் விரைவாகவும் உள்ளத்தில் பற்றிக் கொண்டார். திருவையாற்றிற்கு அண்மையில் உள்ள திருநெய்த் தானத்திலிருந்த வேங்கடராம ஐயங்கார் என்பவர் பால் கம்பராமாயணம் முதலிய நூல்களைக்.
|