வன்னியப்ப பிள்ளை, பா.கி (20-நூ) | ஊர்: | பாண்டிய நாட்டில் பாட்டை. | | தந்தை: | கிருட்டிணப் பிள்ளை; வேளாளர். |
இவர் இளமையிலேயே கவிதை இயற்றும் ஆற்றல் பெற்றவர். | நூல் : | மகப்பேற்றுப் பதிகம், திருமலைத் திருக்குவளைமாலை, உலகாம்பிகை அடைக்கலமாலை, சமயமதி, திருமலைக்குமரன் அலங்காரம். |
வாகீச முனிவர் ( ) இவர் சந்தான குரவர்களில் ஒருவர். இவருடைய ஆசிரியர் பரமானந்த முனிவர். இவர் திருமறைக் காட்டிற்கு அண்மையில் உள்ள கோடலம்பாகை என்னும் ஊரில் தங்கியிருந்தார். இங்குதான் வாகீச முனிவர் ஆசிரியரின் அருளைப் பெற்றார். இந்நூல் 68 அகவற் பாக்களைக் கொண்டது. இந்நூலால் ஆசிரியரின் கல்விச் சிறப்பை உணரலாம். வாகு சிங்கன் ( ) | தந்தை: | துரைரனசிங்கன். | | நூல்: | பழநி நொண்டி நாடகம். |
வாசுதேவக் கவிஞர் (19-நூ) | ஊர்: | கொங்குநாடு. | | நூல்: | பழமொழி மாலை (1875). |
இந்நூல் உரையுடன் கூடியது. பழமொழிகளின் ஏது காட்டிய 30 செய்யுட்களைக் கொண்டது; கூனம்பாடி இராசலிங்க மாணிக்கவாசக சாமிகள் மீது பாடப் பெற்றது. திருக்குறள்
|