பக்கம் எண் :

வாசுதேவ முதலியார்

அதிகாரப் பெயர்களே இப்பாடல்களுக்குத் தலைப்பாக உள்ளன. ஒவ்வொரு செய்தி பற்றியும் விளக்கி அதற்குச் சான்றான பழைய வரலாறுகளும் தரப்பெற்றுள்ளன.

வாசுதேவ முதலியார் (19-நூ)

ஊர்:கோயமுத்தூரைச் சார்ந்த ஓராட்டுக்குப்பை செட்டிபாளையம்.

இவர் திருவாவடுதுறை ஆதினத் தலைவராக இருந்த திருச்சிற்றம்பல தேசிகரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றுச் சமய தீக்கை பெற்றார். பின்னர் சிவஞான சித்தியார் முதலிய நூல்களை ஓதி உணர்ந்தார்.

நூல்:

கருணாம்பிகை சதகம், நஞ்சுண்ட கூடர் புராணம், பவானிப் புராணம், திருமுருகன் பூண்டிப் புராணம், அவினாசி கலித்துறை அந்தாதி, திருப்பேரூர் பச்சைநாயகி அம்மை பந்தடி வருக்கக்கோவை.

கருணாம்பிகை சதகம்:

இது அவினாசியில் எழுந்தருளிய கருணாம்பிகையின் மேல் பாடப்பட்டது. 100 பாடல்களைக் கொண்டது. சிறுவரும் பொருள் கொள்ளும் வகையில் அமைந்தது. அந்தணர் இயல்பு, அரசர் இயல்பு, வணிகர் இயல்பு, வேளாளர் இயல்பு முதலிய அறச்செய்திகள் கூறப்பட்டுள்ளன.

நஞ்சுண்ட கூடர் புராணம்:

நஞ்சுண்ட கூடர் என்பது மைசூருக்கு அண்மையிலுள்ள நஞ்சன்கோடு என்ற சிவப்பதியாகும். இப்புராணம் மைசூர் அரசர் சாமராஜ உடையார் முன்னிலையில் அரங்கேற்றப்பெற்றது.

வாசுதேவ முதலியார், ப (19-நூ)

நூல் :இலக்கணச் சுருக்கம் (1885).

இந்நூல் எழுத்து, சொல் இலக்கணம் பற்றிச் சுருக்கமாக அமைந்தது. பகுபத இலக்கணம், பொருட்புணர்ச்சி கூறும் முறை முதலியன விளக்கப்பட்டுள்ளன.