பக்கம் எண் :

207

வாசுதேவயதி ( )

நூல் :விவேக சாரம்.

வாஞ்சைலிங்க வைத்தியநாத செட்டியார், சி (20-நூ)

ஊர்:உறையூர்.
தந்தை:சிதம்பரஞ் செட்டியார்.

இவர் வித்துவான் தியாகராசச் செட்டியாரிடம் கல்வி கற்றுப் புலமை பெற்றவர்.

நூல் :திருவுறந்தைப் பதிற்றுப் பத்தந்தாதி (1900).

இந்நூல் உறந்தை எனப்படும் உறையூரில் கோயில் கொண்டருளும் சிவபெருமானைக் குறித்த தோத்திரப் பிரபந்தமாகும்; காப்புச் செய்யுள் உட்பட 102 செய்யுட்களை உடையது.

வாடாப்பிரமந்தன்                                  (சங்ககாலம்)

இவர் பெயர் வாடாப்பிரபந்தர், பிரமாந்தர் எனவும் ஏடுகளில் காணப்படுகின்றது.

நூல் :குறுந்தொகை 331.

வாணியன் தாதன் (12-நூ)

இவர் கம்பர் காலத்தில் இருந்த புலவராகக் கருதப்படுகின்றார். கம்பருக்கு ஏற்பட்ட புகழைக் கண்டு அழுக்காறு கொண்டிருந்த செய்தி இவரது தனிப் பாடல்களால் தெரியவருகின்றது. அரசர் கம்பராமாயணத்தைப் பாராட்டியபோது இவர் அழுக்காறு கொண்டு பாடியதாக ஒரு பாடலும், கம்பர் இறந்தபோது பாடியதாக ஒரு பாடலுமாக இவர் பெயரில் இரண்டு பாடல்கள் காணப்படுகின்றன.

நூல்:தனிப்பாடல்கள்.