பக்கம் எண் :

314திருஞானசம்பந்தநாயனார் புராணம்

2170.பேரிசை நாவுக் கரசைப் பிள்ளையார் கொண்டுடன் போந்து
போர்விடை யார்திருத் தோணிப்பொற்கோயி லுட்புகும் போதில்
ஆர்வம் பெருக வணையு மவருடன் கும்பிட் டருளால்
சீர்வளர் தொண்டரைக் கொண்டு திருமாளிகையினிற் சேர்ந்தார்.
272
     (இ-ள்.) பேர் இசை......போந்து - பெரும் இசையினையுடைய திருநாவுக்கரசரைப் பிள்ளையார் உடன் வரவேற்றுக்கொண்டு சென்று; போர் விடையார்...........கும்பிட்டு - போர்விடையினையுடைய இறைவரது திருத்தோணியாகிய அழகிய திருக்கோயிலினுள்ளே புகும்போதில் ஆர்வம் மிக்கதனால் அணையும் அவருடனே கூடி இறைவரைக் கும்பிட்டு; அருளால்......சேர்ந்தார் - திருவருளினாலே சிறப்பு மிகச் செய்யும் அத்திருத் தொண்டராகிய அரசுகளை உடன் அழைத்துக் கொண்டு தமது திருமாளிகையினைச் சேர்ந்தருளினர்.
     (வி-ரை.) கொண்டு - முன்னையது, மதுரமொழியுடன் நல்வரவேற்றுக் கோயிலுக்கு உடன் சென்றதனையும், பின்னையது, அவ்வழிபாடு முற்றியபின், தமது திருமாளிகைக்கு உடன் அழைத்துச் சென்றதனையும் குறித்தன. எதிர் கொண்டு வரவேற்றணைந்தது நகர்ப்புறத்தே என்பது கருதப்படும்.
     கொண்டுடன் போந்து கோயிலுட்புகும் - தலத்தில் அணைந்தவுடன் செய்யும் முதற் கருமமாவது அத்தலத்தில் இறைவரை வணங்குதலேயாம் என்பது இவ்விருவரது துணிபும் முந்தையோர் மரபுமாம். சிவபாதவிருதயர் பிள்ளையாரைக் காணத் திருவாலவாய் சென்றபோது முதலில் திருக்கோயிலிற்சென்று வணங்கிப் பின்னரே திருமடத்தினைக் கேட்டறிந்து சென்றணைந்தனர் (புரா - 877) என்பதும் காண்க. இவ் வுண்மை மரபறியாது ஒழுகும் இற்றைநாளின் நம்போல்வாரது நழுவிய வொழுக்கமும் காண்க.
     ஆர்வம் பெருக அணையும் அவருடன் கும்பிட்டு - ஆர்வம் பெருகுதலாவது தாம் கருதிவந்தபடி பிள்ளையாரை முன்பு கண்டு இறைஞ்சப் பெற்றதனுடன், அவருடனேகூடி அவர்க்கு ஞானமளித்த இறைவரையும் வணங்கப்பெற்ற ஆசை. "விருப்பின் மிக்கார்" (1449), அவருடன் கும்பிட்டு - இதனை முன் 1450 - 1451 பாட்டுக்களில் விரித்தருளினர். ஆண்டுக் காண்க. பிள்ளையாரும் உடன் கும்பிட்டாலும், அரசுகளைக் கொண்டு கும்பிடச் செய்தலே கருத்தாதலின், அவ்வழிபாடு அரசுகளது செயலேயாக நிகழ்ந்த செயலாதல்பற்றி அவர் புராணத்துள் விரித்தோதினார்.
     அருளாற் கொண்டு - அரசுகளைக் காணப்பெற்றது திருவருள் கூட்டக்கிடைத்த பேறென்று பிள்ளையார் கொண்டனர். ஆதலின் தோணியப்பரின் அருள் விடை பெற்றபின் கொண்டு சென்றனர்.
     சீர்வளர் - இறைவரது சீர்களை உலகில் வளரச் செய்கின்ற.
     திருமாளிகை மாடம் - என்பதும் பாடம்.
272
2171.அணையுந் திருத்தொண்டர் தம்மோ டாண்ட அரசுக்கு மன்பால்
இணையி றிருவமு தாக்கி யியல்பா லமுதுசெய் வித்துப்
புணரும் பெருகன்பு நண்பும் பொங்கிய காதலிற் கும்பிட்
டுணருஞ்சொன்மாலைகள் சாத்தியுடன்மகிழ் வெய்தியுறைந்தார்.
273
     (இ-ள்.) அணையும்........அரசுக்கும் - அணையும் திருத்தொண்டர்களுடன், ஆளுடைய வரசுகளுக்கும்; இணையில்........அமுது செய்வித்து - ஒப்பற்ற