|
மார்பில்.....இசைவோடும் - அழகிய மார்பில் முப்புரி நூல் அணிந்த சீகாழித் தலைவராகிய பிள்ளையாரது இசைவு கொண்டு; பின்னாக எய்த இறைஞ்சி - பின்னர் வந்துகூடும்படி நினைத்துக் கொண்டபடியே வணங்கி; பிரியாத நண்பொடும் போந்தார் - பிரிதலில்லாத நண்புரிமையோடும் எழுந்தருளிப் போயினர். |
(வி-ரை.) அந்நாள் - முன் பாட்டிற் கூறிய அத்தன்மையனவாகிய நாட்களாய். அகரம் - முன்கூறிய அந்தத் தன்மை என்று முன்னறி சுட்டு. சில நாள்கள் அந்நாள்கள் போலச் செல்ல என்க. |
எங்கும் - இவ்வுலகில் பற்பல தானங்களிலும்; பல கோயில்களிலும். "நிலவு பல கோயில் கண்டால்" (தேவா). |
பொன்மார்பில் முந்நூல் புனைந்த - அணிமையில் - உபநயனம் செய்யப் பெற்ற குறிப்பு (2161). |
இசைவோடும் - எங்கும் கும்பிட வேண்டுமாதலின் பிரான் இசைவு கொண்டனர் என்பது குறிப்பு. |
பின்னாக எய்த பிரியாத - நண்பொடும் போந்தார் - "உவப்பத் தலைக்கூடியுள்ளப் பிரித, லனைத்தே புலவர் தொழில்" (குறள்) என்ற உண்மைக்கு இச்செயலையே எமது மாதவச் சிவஞான முனிவர் எடுத்துக்காட்டாகக் காட்டியருளியமை காண்க. பின்னாக எய்துதல் - பிரியும்போது இருவர் திருவுள்ளத்துமிருந்த கருத்து, இக்கருத்துப் பின்னர்த் திருப்புகலூரில் இருவரும் எதிர் பாராதவண்ணம் நிறைவேறியது காண்க. (புரா - 492). 1498-ம் பார்க்க. பின்னாக எய்த - பின் வந்து வழியனுப்ப என்றலுமாம். பிரியாத நண்பொடும் போதலாவது - திருமேனிகள் பிரிவெய்தினும் நண்புரிமை பிரிதலில்லை என்பது. திருப்பூந்துருத்தி நிகழ்ச்சியும் இங்குக் கருதற்பாலது. புரா - 927-ம் 1657-ம் பார்க்க. இங்குக் கூறியது அரசுகளது மனநிலைபற்றியதும், மேல்வரும் பாட்டில் "மாறாத் திருவுள்ளத் தோடும்" (2173) என்பது பிள்ளையாரது மனநிலை பற்றியதுமாம். |
போந்தார் - அரசர் வேண்டி - இசைவோடும் - போந்தார் என்க. போந்தார் - சீகாழியினின்றும் புறப்பட்டருளினர். |
இசைவோடும் பின்னாக எய்த - உடன்பாட்டோடும் பின்னேவர என்றுரைப்பாருமுளர். அது பொருளல்லாமை உணர்க. |
274 |
2173.வாக்கின் றனிமன்ன ரேக, மாறாத் திருவுள்ளத் தோடும் |
பூக்கமழ் பண்ணைகள் சூழ்ந்த புகலியின் மீண்டும் புகுந்து |
தேக்கிய மாமறை வெள்ளத் திருத்தோணி வீற்றிருந் தாரைத் |
தூக்கின் றமிழ்மாலை பாடித் தொழுதங் குறைகின்ற நாளில், |
275 |
2174.செந்தமிழ் மாலை விகற்பச் செய்யுட்க ளான்மொழி மாற்று |
வந்தசொற் சீர்மாலை மாற்று வழிமொழி யெல்லா மடக்குச் |
சந்தவி யமகமேக பாதந் தமிழிருக் குக்குறள் சாத்தி |
எந்தைக் கெழுகூற் றிருக்கை யீரடி யீரடி வைப்பு, |
276 |
2175.நாலடி மேல்வைப்பு மேன்மை நடையின் முடுகு மிராகஞ் |
சால்பினிற் சக்கர மாதி விகற்பங்கன் சாற்றும் பதிகம் |
மூல விலக்கியி மாக வெல்லாப் பொருள்கோளு முற்ற |
ஞாலத் துயர்காழி யாரைப் பாடினார் ஞானசம் பந்தர். |
277 |