பக்கம் எண் :

318திருஞானசம்பந்தநாயனார் புராணம்

என்னை? மேற்கூறும் விகற்பச்செய்யுட்களின்பெரும்பான்மை சந்த இசைத்தமிழ் அமைதிகள் குறித்தற்கென்க. இவை தாளக்கூறுபாடுகள். தூக்கு - உயர்ச்சியுடைய என்ற குறிப்பும்பட நின்றது. உயர்ச்சியாவது சொல்லும் சந்தஇசையும் உயர்ந்த நிலையிற் காணப்படுதலுடன் பொருள் உயர்வும் கொண்டு அருளுருவாய் அழியாது நிலவும் தன்மை.
     பூக்கமழும் பணைசூழ்ந்த - என்பதும் பாடமாம்.
275
     2174. (வி-ரை.) விகற்பச்செய்யுட்கள் - மிறைக்கவிகள் என்ப. சொல்லும் சந்தமும் விரவிப் பற்பல ஓசை மாறுபாடுகள் படப் பாடப்படுவன மிறைக்கவிகள். விகற்பம் - வேறுபாடு. மேற்கூறப்படும் பதிகங்களின் பொதுவியல்பை எடுத்துக் கூறியபடி.
     மொழிமாற்று - மாலைமாற்று - வழிமொழி - இயமகம் - ஏகபாதம் - இருக்குக் குறள் - ஈரடி - ஈரடி மேல்வைப்பு - இவை பதிகப் பெயர்கள். இவையும் மேற்பாட்டில் வரும் நாலடிமேல் வைப்பு - சக்கரம் (மாற்று) என்பவையும் விகற்பச் செய்யுட்களாதல் கண்டு கொள்க.
     எழுகூற்றிருக்கை - 1, 1, 2 - 1; 1, 2, 3 - 2, 1; 1, 2, 3, 4 - 3 - 2 - 1; என்றிவ்வாறு 1 முதல் ஏழுவரை ஏறியும் இறங்கியும் எண்ணலங்காரம்படப் பாடப்படும் ஒருவகைப்பாட்டு. பதிகக் குறிப்புப் பார்க்க.
     எந்தைக்கு - எமது பிரானாகிய சீகாழி இறைவருக்கு என்றும், எமது தந்தையாகிய சிவபாதவிருதயரின் பொருட்டு என்றும் இரட்டுற மொழிந்து கொள்ள நின்றது. பதிகக்குறிப்புப் பார்க்க. தந்தையார்க்காக அருளினர் என்பது வழக்கு.
     வழிமொழி - சீகாழியின் பன்னிரண்டு பெயர்களும் வந்தவழி - வரலாறு - மொழியப்பெறும் பதிகம் என்க. இது வழிமொழித் திருவிராகம் எனப்படும் பதிகக் குறிப்புப் பார்க்க.
     எல்லாம் மடக்குச் சந்த இயமகம். ஏகபாதம் - அடிதோறும் எல்லாச் சீர்களும் மீண்டும் மடக்கி வருதலாகிய சந்தம்பெற்ற இயமகமாகிய திரு ஏகபாதம் என்க; அடிமுழுதுமாகிய எல்லாச் சீர்களும் மடக்கி வருதலாகிய சிறப்புடைய தென்பார் எல்லா மடக்குச் சந்தவியமகம் என்று விசேடித்தார். மடக்கு - தமிழ்ப் பெயர். இயமகம் - வடமொழி; மரபு விளக்கவும் இயல்பு குறிக்கவும் இரண்டுங் கூறினார். "உற்றுமைசேர்வது" என்னும் திருவியமகப் பதிகம் பின்னர் அருளியது. புரா - 954 பார்க்க. ஏகபாதமும் இயமக வகையுட் சேர்வதாயினும் எல்லாச் சீர்களும் மடங்கி வரும் சிறப்புடையது.
     இருக்குக்குறள் - குறள் - இருசீரானியன்ற அடியுடைய பாட்டு. இருக்கு - மந்திரப் பொதுமை யுணர்த்திற்று. செய்யுள் விகற்பமுமாம்.
     ஈரடி - இரண்டடிகளாலியன்ற பாட்டுக்கள் கொண்ட பதிகம். ஆகுபெயர்.
     ஈரடிவைப்பு - செய்யுளின் நான்கடிகள், முன்ஈரடிகள் ஒரு பெற்றியாகவும், பின்னீரடிகள் வேறொரு பெற்றியாகவும் அமைவது. வைப்பு - சந்தமும் பொருளும் மேல் ஒட்டிவைத்தது போலக் காணப்படுவது. இவ்வாறு வைப்பாவுள்ள பின்னீரடிகள் பதிகமுழுதினும் ஒன்றேயாக வருவனவும், வெவ்வேறாக வருவனவும் உண்டு.
     மடக்குஞ் ஏந்தவியமகம் - ஈரடி வைப்பும் - என்பனவும் பாடங்கள்.
276
     2175. (வி-ரை.) நாலடி மேல்வைப்பு - பாட்டின்முன் நான்கடிகள் ஒரு பெற்றியாகவும், மேல்வரும் இரண்டடிகள் வேறுமொர் பெற்றியாகவும் ஒட்டியது போன்று வருவன; ஈரடிமேல் வைப்புப்போல.
     நடையின் முடுகும் இராகம் - இராகம் - என்றபெயரின் தன்மையை விளக்கும் வகையால் உடம்பொடு புணர்த்தி ஓதினார். நடை - ஓசை; முடுகுதல் - விரைந்த -