|
திருமொழிமாற்று |
திருச்சிற்றம்பலம் | பண் - வியாழக் குறிஞ்சி |
|
காட தணிகலங் காரர வம்பதி காலதனிற் |
றோட தணிகுவர் சுந்தரக் காதினிற் றூச்சிலம்பர் |
வேட தணிவர் விசயற் குருவம்வில் லுங்கொடுப்பர் |
பீட தணிமணி மாடப் பிரம புரத்தாரே. |
(1) |
கல்லுயர் கழுமல விஞ்சியுண் மேவிய கடவுடன்னை |
நல்லுரை ஞானசம் பந்தன்ஞா னத்தமிழ் நன்குணரச் |
சொல்லிடல் கேட்டல்வல் லோர்தொல்லை வானவர் தங்களோடுஞ் |
செல்குவர் சீரரு ளாற்பெற லாஞ்சிவ லோகமதே. |
(12) |
திருச்சிற்றம்பலம் |
பதிகக் குறிப்பு :- காடதுபதி - காரரவம் அணிகலம் என்றிவ்வாறு மொழிகளை மாற்றிக் கூட்டிப் பொருள் கொள்ள வைத்த விகற்பச் செய்யுள் என்னும் மிறைக்கவி. இறைவரது தடத்த சொருப வியல்புகளை எடுத்து அதிசயம்பட இவ்வாறு போற்றுதல் கருத்து. "ஞானத்தமிழ்" (12) என்று இதன் இயல் புரைத்துப் பயன் அருளியதும் காண்க. |
பதிகப்பாட்டுக் குறிப்பு :- (1) காடு - பதி; அரவம் அணிகலம்; காதினில் தோடு; காலதனில் தூச்சிலம்பர்; வேடது உருவம்; விசயற்கு வில்லும்கொடுப்பர்;- (2) கங்கை கற்றைச் சடையது; கங்கணம்முன்கையில்; படைத்தோன் (பிரமன்) தலைபற்றித்து; முப்புரம் சுட்டது; கூற்றை எற்றித்து (உதைத்தது); பாம்பை அணிந்தது;-(3) கூவிளம் சடைமுடிக் கூட்டத்தது (கூட்டம் - கற்றை; தொகுதி) பேரி - துடி - கையது; பொடி (நீறு) பூசிற்று; துதித் பூண்டது; துத்தி - படம்; படமுடைய பாம்புக்கு வந்தது. ஆகுபெயர்; நுதலாளைப்பக்கம் (வைத்தனர்); நாகம் - (யானை) உரித்தனர்;-(4) களிற்றை உரித்தது; பாம்பை உடல்மிசையிட்டது; எரித்தது முப்புரத்தை; ஓர் ஆமை (ஆமையின் ஓடு)யைப் பூண்டது; (விட்டுணு தமது கூர்மாவதாரத்தில் முதுகோட்டை அர்ப்பணம் செய்து வழிபட்ட வரலாறு குறித்தது); இன்புறு - அதனால் விட்டுணு இன்பமுற; தக்கனை வேள்வி செருத்தது; ஏந்திற்றுச் சூலத்தை; பன்னூல் விரித்தவர் - மறை முதலிய கலைகளில் வல்லவர்;-(5) கொட்டுவர்தக்கை; ( தக்கை - இயங்களுள் ஒன்று); அரையார்ப்பது அக்கு; (அக்குவடம்); குறுந்தாளனபூதம் கலப்பிலர்; இன்புகழ் விட்டுவர்; மட்டுவரும் மத்தம் சூடுவர் - ( மட்டு - மணம்); தழல் ஏந்துவர்; வான்தொட்டுவரும் கொடி - விண்ணளவுயர்ந்தகொடி;-(6) சாத்துவர்கோவணம்; பாசம் கையிலேந்துவர்; கச்சுக் குலாவிநின்று அவர்கூத்து ஆடுவர்; கொக்கிறகும் சூடுவர்; பல்படை பேயவை பேர்த்தவர்; படை - படைகளாக; பேர்த்தல் - சூழக்கொள்ளுதல்; பேர்எழிலார் பூத்தவர் - மிக்க எழிலுடைய பெண்கள்.-(7) காலது கழற்சிலம்பு ( கழல் - காலணி மணிவடம்); சடையுள்ளார் கங்கை; மாலது பாகம்; மழுஅது ஏந்தல் (ஏந்துவது); ஆலதன்கீழ் இருப்பர்; ஆல் - கல் ஆலமரம்; கோடு - கொம்புகள்; ஏறுஊர்வர்; சேலதுகண்ணி - சேல்மீன்போன்ற கண்ணையுடைய உமையம்மையார்;-(8) நெறுப்புறு மேனியர்; வெள்விடை ஏறுவர்; நெற்றியின் கண் கண்ணர்; மருப்புருவன். (விநாயகர்) தாதை |