|
மாமுருகன் விருப்புறு தந்தையார்; பாம்புக்கு மெய்காட்டுவர்; பொருப்பு உறு - மலைபோன்ற; உறு - உவமவுருபு :-(9) இலங்கைத் தலைவனை இறுத்தது; இரலை (மான்) ஏந்திற்று; கூற்று குமை பெற்றது; மாணி உயிர் பெற்றது; மாணி - பிரமசாரி - மார்க்கண்டேயர்; காட்டகத்து ஆடுவர்; மொந்தை (ஒருவகை இயம்) கொட்டுவர்;- (10) மால் அடியிணை கண்டிலன்; தாமரையோன் முடிகண்டிலன்; புலித்தோல் உடுப்பர்; ஏறு ஏறுவர்; பிடி நடையாள் ஓர் கூறுடையார்; வெற்பு இருப்பது; (வெற்பு - மலை - கயிலை) - (11) கையது சூலம்; காத்துகுழை; தம்மைச் சமணர் புத்தர் எய்தார்; அடியார் எய்துவர்; ஏனக் கொம்பு பூண்டது; ஏனம் - பன்றி; கோவணம் உடுப்பது; - (12) ஞானத்தமிழ் - இறைவரது சொரூப தடத்த இலக்கணங்களையும், சாதனங்களையும் அறிவிப்பது; "பிறவியெனும் பொல்லாப்பெருங்கடலை நீந்தத், துறவியெனுந் தோற்றோணிகண்டீர்...... சம்பந்தன் தன்மாலை ஞானத்தமிழ்" (ஆளு. பிள். மும். 11); நன்குணர்தல் - மொழிமாற்றின் கூறறிந்து பொருளை உள்ளுணர்தல். |
குறிப்பு :- பிரமபுரம் முதலாகக் கழுமல மீறாகச் சீகாழிப் பன்னிரு பெயர்களையும் அம் முறையே இப்பதிகத்தினுள் பன்னிரண்டு பாட்டினும் போற்றுதல் காண்க. இம்முறையே பின்வரும் வழிமொழி, ஏகபாதம், இயமகம், இருக்குக் குறள், ஈரடி, ஈரடி மேல்வைப்பு, நாலடி மேல்வைப்பு, சக்கரமாற்று என்ற விகற்பச் செய்யுட் பதிகங்களிலெல்லாம் அமைத்துப் பன்னிரண்டு பாட்டுக்களாற் பதிகமருளியமை காண்க. திருவெழுகூற்றிருக்கையிலும் அப் பெயர்களை அவ்வரிசையிலே அமைத்துப் போற்றியதும் காண்க. 1912-ம் ஆண்டுரைத்தவையும் நினைவுகூர்க. |
திருமாலைமாற்று |
திருச்சிற்றம்பலம் சீகாழி | பண் - கௌசிகம் |
|
யாமா மாநீ யாமாமா, யாழீ காமா காணாகா, |
காணா காமா காழீயா, மாமா யாநீ மாமாயா. |
(1) |
நேரக ழாமித யாசழிதா, யேனநி யேனனி ளாயுழிகா |
காழியு ளாநின யேநினயே, தாழிச யாதமிழா கரனே. |
(11) |
திருச்சிற்றம்பலம் |
பதிகக் குறிப்பு :- இறைவர் மாயையை ஆள்பவர்; (மாயேசர்); ஞான ஆகாயத்தில் விளங்குபவர் என்பனவாதி இறைமைக் குணங்களைப் போற்றியது. |
பதிகப்பாட்டுக் குறிப்பு :- இப்பாட்டுக்களின் சொற் பொருள்கள், அறிவும் புலமையும் அன்பும் அருளும் சான்ற பெரியோர்பாற் கேட்டறியத் தக்கன. |
குறிப்பு :- மாலை மாற்றென்பது பாட்டினை முன்னிருந்து பின் படிப்பினும்; மாற்றிப் பின்னிருந்து முன் படிப்பினும் ஒன்று போல் வருவது. மாலை - வரிசை. மாற்று - மாறுதலுடையது; "ஒருசெய்யுள் முதலீறுரைக்கினு மஃதாய் வருவதை மாலை மாற்றென மொழிப" (மாறனலங்காரம்). இப்பாட்டு ஓரடி முன்னிருந்து செல்வதும், ஓரடி பின்னிருந்து செல்வதுமாக அமைந்து அதுவே ஈரடியால் வந்த வஞ்சித் துறைப்பா. 8 - 9 - 0 - 11 பாட்டுக்கள் ஏனைப் பதிகங்கள் போலக் கருத்தமைந்தன. யாளி வாகனமாதற்கு, "யாமா மாநீ யாமாமா யாழி" என்பது மேற்கோள் காட்டப்பட்டது; (தக்கயாகப்பரணி 594 உரை). |