பக்கம் எண் :

திருத்தொண்டர் புராணமும் - உரையும்323

யால் புகலி என்ற பெயர் பெற்றநகர் என்பது;-(4) அங்கிநிகர் - எரியுருவுடைய புலன்கள் களைவோர் வெங்குரு - தவமுனிவர்களுக்குட் பெரியரான வியாழன்; தேவகுரு வழிபட்டமையால் வெங்குரு எனப்பட்டது; வெங்குரு - அசுரகுருவாகிய சுக்கிரன், நாரத முனிவர் உபதேசத்தால் பூசித்து உயர்ந்த வரலாறு என்பது மொன்று; - (5) ஆண் இயல்பு - ஆண்மைத் தன்மை; வீரம்; வனவாண இயல் - வேடவுருவம்; பேணி - மேற்கொண்டு; பாணமழை.......நாணி - விசயனுடன் செய்த விற்போர்; ஏணுசிலை - பெருமையுடையவில்; பாணியமர் - மற்போர்; பாணி - கை. அருள்மாணும் - பேர் அருள்புரிந்த. மாண் அருளும் என்க; பிரமாணி - பிரமாணமாகிய மறைகளுக்கு இலக்கியமாக - வாச்சியமாக - உள்ளவர்; ஏணுமுறை - காலாந்தரம். ஊழிநியதி; பாணி உலகாள - நீர்ப்பெருக்கு உலகை விழுங்க; ஊழி வெள்ளத்தில் தோணிபோன்று மிதத்தலாற் றோணிபுரம் என்று பேர் பெற்றது; (6) நிராமய என்பது முதலியன இறைமைக் குணங்கள் பற்றிப் போற்றிய பெயர்கள்; புராணன் - பழமையானவன். முன்னைப் பழம்பொருள்; அரா - விட்டுணுவின் பாம்பு அணை; அர பராயண - அரனைத் தியானிக்கின்ற; வராகஉரு - பன்றி உருவெடுத்த; வாதராயனை - விட்டுணுவை; (பன்றி) வராகவுருவெடுத்து விட்டுணு இரணியாக்கனைக் கொன்று பூமியைக் கொம்பிலேற்று வருத்தியபழி போக வழிபட்ட காரணத்தால் பூந்தாராய் - எனப்பட்டதென்பது. பூ - பூமி; தராய் - தரித்தல்; பூந்தாராய் என்பது தராய் என நின்றது; மொழி - பெயர் :- (7) அரணை - காவலுடையமதிலை; முரணர் - பகைவர். முப்புரவாணர்; படைக்கரம் விசிறு - அம்பு எய்த - தொடுத்தமட்டில் நின்ற என்க; கரணமமர்வன் - உள் இருப்பவர்; எறிகொள் கரன் - எறி - படை; ஏந்திய கையுடையவர்; அமுது விரவ - உடல்புரள உறும் அரவை - புரளும் உடலுடைய பாம்பினை; அரி - அமுது படைத்து வந்த விட்டுணு; சிரமரிய - சட்டுவத்தினால் தலையை வெட்ட; சிரம் - இராகு; அரன - அரனுடைய; இருகிரகம் - இவ்வாறு இராகு கேதுக்களான இரண்டு கிரகங்கள்; சிரபுரம் என்ற பெயர் போந்த வழி; - (8) அறம் அழிவு பெற - தருமம் சிதைய; உலகுதெறும் - உலகினை அலைக்கும். புயவன் - புய வலிமைபெற்ற இராவணன் அழிய விரல் நிறுவி - என்க; மா.......உற அருளும் - பின்னர், வளைந்த பற்களை (வக்ரதந்தம்) யுடைய அவ்வரக்கன் சாமவேதத்தால் முறைப்படி துதிக்கவே அருள் செய்த; மறை அமரர் - பருந்தும் புறாவுமாக முறையே மறைந்த உருவொடும் வந்த இந்திரனும் அக்கினியுமாகிய தேவர்கள் நிறை - புறாவின் எடைக்குத் தக்க சதை; புறவன் - புறா உருவாய் வந்த தீக்கடவுள். நிறை நிலவு - அரிந்த தசை போதாமைகண்டு சிபிச்சக்கரவர்த்தி தான் துலையேறி எடை சமன்பெற நிலவச் செய்த; பொறையன் - பாவம் பொறுத்தவனை; தீக்கடவுள்; புறவம் - அப்பழி போகப் புறா புசித்ததால் வந்தபெயர்;-(9) பிரமன் விண்பயில, மால்மண்பகிர் என நிரனிறை யாக்குக; கண்பரியு மொண்பொழிய காணும் முயற்சி யொழிய; ஒண்பு - ஊக்கம். நுண்பொருள் - காணமாட்டாது நீண்ட தன்மை; மண்புரியும்.......நுண்புரகர் - மண்ணின் நுண்புழுதிபோல அராவியஇருப்பு உலக்கைத்தூள்; விண்படர அச்சண்பை - அவை சண்பைப் புல்லாக முளைக்க அவற்றால் யாதவ குமரர்கள் அனைவரும் இறந்தொழியும்படி; மொழி - பண்பு அ - முனி - சொல்லிய அக்கபில முனிவர் சாபம் பலிக்க; கண்பழி செய் பண்புகளை - அச்சாபம் தன்னைப் பற்றாதபடி களைந்து கண்ணனுக்கு அருளிய; அக்காரணத்தால் சண்பை என்ற பெயர் பெற்ற நகரம்; கண்ணுதல் - அடைதல்; களை - நீக்கிய;- (10) பாழி - சமணகுருமார் தங்குமிடம்; வேழம் - பருத்த உடலுடைய என்று பொருளில் வந்தது; "மந்திபோற் றிரிந்து" (தேவா); ஏழை - உமையம்மை;