பக்கம் எண் :

324திருஞானசம்பந்தநாயனார் புராணம்

தாமும் - விரும்பும்; கீழ் - மேல் உலகில் வாழரசு - சூழ் அரசு - காளிதன் என்னும் நாகராசன் பூசிக்க; காளிதன் பூசித்தமையால் காளி - காழி - யாயிற்று காளி பூசித்ததனாலும் இப்பெயர் வந்ததென்பதும் வரலாறு; - (11) அசைச்சு - அசைத்து - வீக்கி; மிலைச்சு - சூடி; மெய்ச்சிரம் ஒரு கையால் அணைச்சு - பிரமன் தலை ஓட்டினை ஒரு கையில் ஏந்தி; அமர் - விரும்பும்; பிச்சன் - பித்தன்; பிச்சை வேண்டுபவன் என்றலுமாம்; மச்ச.......சிறுமியை - மச்சகந்தியை; அவச்சவிரகக் கொச்சை - வசமிழந்து ஆற்றினிடையிற் செய்த காமச் செயலுடைய - புணர்ந்த அச்சர் - பராசரமுனிவன்; அம்முனிவன் பூசித்து அக்கொச்சை நீங்கியதனால் கொச்சைவயமாயிற்று;-(12) ஒழுகல் அரிது அழிகலியில்.....நினைந்து - நல்லொழுக்கத்தினிற்றல் அரிதாகி அழிகின்ற கலிகாலத்தில் உலகில் பழிபெருகுதலை நினைந்து வருந்தி; முழுது உடலில் எழும் மயிர்கள் தழுவுமுனி - உடல் முழுதும் மயிர் உடைய உரோமச முனிவர்; உரோமசர் வழிபட்டு மலம் நீங்கச் சிவஞான உபதேசம் பெற்றதனாற் கழுமலமாயிற்று; வழி மொழிகள் - பெயர்வந்த வழியைச் சொல்லும் பாட்டுக்கள்; பதிகப்பெயர். மொழிதகைய - பயிலும் தகைமையுடையன.
திருஏகபாதம்
திருச்சிற்றம்பலம் பண் - வியாழக் குறிஞ்சி
பிரம புரத்துறை பெம்மா னெம்மான்
பிரம புரத்துறை பெம்மா னெம்மான்
பிரம புரத்துறை பெம்மா னெம்மான்
பிரம புரத்துறை பெம்மா னெம்மான்.
(1)
கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை
கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை
கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை
கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை.
(12)
திருச்சிற்றம்பலம்
     பதிகக்குறிப்பு :- ஒரு அடிபோலவே எல்லா அடிகளும் வருதலால் இது ஏகபாதம் எனப்படும். இயமகம் அடிதோறும் ஒன்றும் பலவுமாகிய சீர்கள் மடக்கி வருவது; இஃது அதனுட் சிறப்புவகை என்பார் "எல்லா மடக்குச், சந்த வியமகம்" என்றுஇதன் இலக்கணத்தை ஆசிரியர்காட்டியருளினர்; (2174). சீகாழிப் பன்னிரு பெயர்களையும் சார்த்தி இறைவர் புகழ்களைப் போற்றுவது.
     பதிகப்பாட்டுக் குறிப்பு :- கண்ணுடைய வள்ளலார் இப்பதிகத்தின் திருவுள்ளக் கருத்துக்களாக உரை செய்தருளியவை காஞ்சிபுரம் சபாபதிமுதலியார் துந்துபி வருடம் ஆடி மாதம் பதித்த அடங்கன் முறைப்பதிப்பிலும், பின்வந்த பதிப்புக்களிலும் உள்ளன. அவற்றுள் மேற்காட்டிய முதலிறுதிப் பாட்டுக்களின் திருவுள்ளக் கருத்துக்களை ஸ்ரீ ஆறுமுகத் தம்பிரான் சுவாமிகள் உரையிலும், திரு. சூளை. சுப்பராய நாயகர் பொழிப்புரையிலும் எடுத்துப் பதித்துள்ளார்கள். விரிவுகள் ஆண்டுக்காண்க. அவற்றைத் தழுவிச் சில குறிப்புகள் ஈண்டுத் தரப்படுகின்றன:- (1) 1. பிரமம் - ஞானாகாயமாகிய பராசக்தி; புரத்துறை - அதனை மிகுதியாக வியந்து; பெம்மான் - எம்மான் - எந்தப் பெரியோன் ஞானாகாயமாகிய பராசத்தியான பரிபூரணத்தை மிக வியந்து அதற்கு சீதமான பெரியோன்; 2. பிரமபுரத்து - மேல் நிலத்து; உறை - தண்ணீர்; பேம் - விருப்பம்; மான் - மான் போன்ற பெண்; எம் - எம்முடைய; ஆன் - ஆன்மா; மேல் நிலமாகிய ஆகாயத்தில்