பக்கம் எண் :

திருத்தொண்டர் புராணமும் - உரையும்325

ஓடும் கங்கையை முடியில் வைத்தவன் எமதுயிர்; 3. பிரமம் - பிரமத்துவம்; புரம் - சக்கரம்; உறை - எண்ணுதல்; பெம் - ஆசை; ஆன் - அமையாமை; எம்மான்; - என்னை ஒக்க வந்தவன்; பிரமரூபத்திலே என்னை முத்தியில்விட விரும்பி என்னை யொக்க வந்தவன்; 4. பிரமபுரம் என்னும் சீகாழியில் உள்ள இறைவர் எனது கடவுள்:- வெளிப்படை; பெரியோனும் எனக்குயிரானவனும் என்னை ஒக்க வந்தவனும் சீகாழியில் வீற்றிருக்கும் கடவுள் என்று முடிக்க :- (2) 1. விண்டு - மலை; அலர் - ஒலி; பொழில் - உலகம்; அணிவு - அகப்படுத்தல்; ஏண் - பெருமை; நுபுரம் - சிலம்பு; நூபுரம் என்பது நூபுரம் எனக் குறுகிநின்றது; திருச்சிலம்பின் பருமையும் ஒலியின் பெருமையும் குறித்தது; சிலம்பினைத் தரித்தவன். தரன் - தரித்தவன்; 2. விண்டு விட்டுணு; அலர் - புறனுரை; பொழில் - அரசினிழல்; அணி - பொருந்தி; வேணு - விருப்பம்; புரத்து அரன் - புரத்தை அரித்தவன் - புத்தனாக வந்த விட்டுணுவின் புறனுரையை அரசமர நிழலிலிருந்து கேட்டு விரும்பிய புரத்தை எரித்தவன்; 3. விண்தலர் - தேவர்; பொழில் - கற்பகச் சோலை; அணிவு - சூடுதல்; ஏணு - எண்ணும்; புரத்தான் - தேவேந்திரனுடைய :- எணு - ஏணு என நீண்டது - புரந்தரன் - புரத்தரன் என வலித்து நின்றது. தேவர்கள் கற்பக மலர்களால் ஏத்தும் இந்திரனால் வழிபடப்பட்ட காரணப்பெயர் பெற்ற; 4. வெளிப்படை.- (3) 1. புண்டரிகத்தவன் - இதய கமலத்திலுள்ளவன்; மேவிய புகலியே - எனக்கின் பந்தருவானு மாய் மீளாத புகலிடமாயுள்ளவன்; ( புகல் - அபயம் புகுமிடம்) 2. புண்டரிகம் - திரிபுண்டரம்; தவன் - மிக்க பெருமையுடையவன்; மேவிய - சொல்லப்பட்ட; புகலி - சொல்லப்பட்டவன்; ( புகல் - சொல்) ஏ - ஈற்றசை :- உயிர்களுக்கு இரட்சையாகத் திருநீற்றையணிபவனே என்பாடலுக்கிசைந்தவன் 3. புண்டரிகம் - புலி; தவன் - முனிவன்; மே - கூத்து; வியம் - பொன்; பு - பொது; கலி - கற்றவன். ( கல் - பகுதி); கனகசபையில் புலிமுனிவருக்கு நடங்காட்டக் கற்றவன். 4. புண்டரிகத்தவன் - பிரமன். (புண்டரிகம் - தாமரை); மேவிய - பணிந்த; புகலி - சீகாழி.-(4) 1. விள - விளாம்பழத்தை; கொளி - கன்று குணிலாக எறிந்து கொண்டவன். விட்டுணு; கொளி - கொள்பவன் கொண்டவன்; தி - விட்டுவிளங்கும்; கழ்தரு - நின்மலநீடிய; எங்கு - எவ்விடத்தில்; உருமேவினன் - தன்னுடைய உருவில்; பொருந்தியவன் :- கன்று குணிலாக எறிந்து விளங்கனி கொண்ட மாலை மேனியில் ஒரு பாகத்தில் வைத்தவன்; தீ - எனற்பாலது தி எனக் குறுகியும், கழுதரு என்பது கழ்தரு எனவும் நின்றன, 2. விளங்கு - (விலங்கு) இடைவிட்டுவிட்டு; ஒளி - ஒளியுடைய; தி - தீயுடனே கழ்(ழு)தரு - மிக்க பயத்தோடும் விழுகின்ற; எங்கு - (ஏங்கு) ஒலிக்கின்ற; உருமு - ஏவினன் - உருமு என்னும் இடியாகவும் வந்து உலகை ஆள்பவன்; "முழங்கியுரு மெனத்தோன்றி மழையாய் மின்னியிடித்தவன்காண்" (கச்சி - தாண் - 7); இதற்கு இவ்வாறன்றி, மாறுபடும் ஒலியுடைய புத்தன் தலையில் இடியை ஏவினவன் என்ற சரிதவரலாறுபற்றி உரை கூறினர் முன் உரைகாரர்; அது பின் நிகழ்வதாகலின் மேற்கூறியபடி உரைக்கப்பட்டது. (புராணம் - 909 பாட்டுப் பார்க்க.) தீ - தி எனவும், காழ்தரு என்பது கழ்தரு எனவும், ஏங்கு - எங்கு எனவும் நின்றன. ஏங்குதல் - ஒலித்தல் - குமுறுதல். 3. விள் - நீங்குதல்; அங்கு - அவ்விடத்தில்; ஒளிது - ஒள்ளியது; இகழ்தருஎம் - கீழாயின எம்மிடத்தும்; குருமேவினன் - குருவாக வந்து கலந்தவன்; அங்கு - மறக்குமா றிலாத வெள்ன்னை மையல் செய்திம் மண்ணின்மேற் பிறக்குமாறு காட்டினாய்" (தேவா) என்ற அவ்விடத்தினின்றும்; விள் - நீங்கிய; இகழ்தரும் என்றது மையன்மானிட